ஜப்பானைச் சேர்ந்த மியாவாக்கி என்பவர் உருவாக்கிய காடு வளர்க்கும் முறையின் பெயர் தான் மியாவாக்கி காடு. நெரிசலான நகரினுள் கூட குறைந்த நிலப்பரப்பில் பெருமளவு மரங்கள் கொண்ட அடர்ந்த காடுகளை வளர்த்து உருவாக்க முடியும் என்பதே மியாவாக்கி செய்த கண்டுபிடிப்பு. இவரது கண்டுபிடிப்பிற்காக மியாவாக்கி நோபல் பரிசும் பெற்றுள்ளார். இதுவரை மியாவாக்கி 1 கோடி மரங்களை இம்முறையில் நட்டு வளர்த்துள்ளார்.
இந்த மியாவாக்கி முறையை தமிழ்நாட்டு சூழலுக்கு ஏற்ப வடிவமைத்து உருவாக்கலாம் என்பதை சென்னையைச் சார்ந்த ஐ.ஜே.எல் நிறுவனம் மியாவாக்கி காடுகளை சென்னைையில் பல நிறுவனங்களில் உருவாக்குவதன் மூலம் சாதித்துக் காட்டியுள்ளது.
இவ்வகையான காடுகள் பொருளாதார லாபமும் தரக்கூடியவை. எப்படி என்பதை காணொளியில் காணுங்கல். நன்றி கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி