தன் மகளுக்கு கொரானா அறிகுறி எனவும் இராமச்சந்திரா கொஸ்பிற்றலில் அட்மீட் பண்ண மறுத்துவிட்டார்கள்.. என சிறு குழந்தையை ஏந்தியபடி நேற்று ஒருவர் அழுது நின்ற facebook வீடியோ பார்த்தேன்…
நியதி என்ன என்றால் மறைமுகமான எழுதப்படாத உலக சட்டம்..
ஒரு குடும்பத்தை காப்பாற்ற ஒருவரை காவு கொள்ளலாம்
அதாவது…
அது நானோ
அல்லது என் மனைவி
அல்லது அம்மா ,அப்பா ,பாட்டி..
அல்லது எங்கள் குழந்தை.. 😪
ஒரு ஊரை காப்பாற்ற ஒரு குடும்பத்தை கொல்லலாம்.
ஒரு நகரத்தை காப்பாற்ற ஒரு ஊரில் உள்ள அனைவரையும் கொல்லலாம்
ஒரு நாட்டை காப்பாற்ற ஒரு நகரத்தில் உள்ள எல்லோரையும் கொல்லலாம்…
இது தான் உண்மை..
இந்த மூவியில் ஆரம்பத்தில் நடக்கிற சீன் தான் இப்போ நடக்கிறது…
ஒரே ஒருத்தனுக்கு வரும் தும்மல் இருமல் டப்பு டப்பு என்று அந்த ஊரிலே உள்ள அனைவருக்கும் பரவுகிறது..
அதனாலே ஊரடங்கு சட்டம்
மக்கள் சூப்பர் மார்க்கெட் கூடுவது..
நோய் பரவலாகுவது..
அதோடு ஹீரோவின் குழந்தைக்கும் பரவுகிறது ..
நோயாளிகள் அனைவரையும் சுட்டுக்கொல்ல அரசு உத்தரவு வருகிறது..
அந்தக் குழந்தையின் நோயை மறைச்சு ஒளிச்சு அதிகாரிகளிடம் தப்ப முயற்சிப்பதே கதை..
ஆனால் இந்த படம் வந்தது 2013.
எப்படி யோசித்தாங்களோ தெரியவில்லை ..
நோய்,
நோய் பரவும் நிலை…,
மக்கள் பொருட்களுக்கு அடிபடுவது,
மருத்துவ முறை,
ஒரு நகரத்தையே பூட்டுவது , என ஆரம்ப கட்டம் எப்படி காட்டப்பட்டதோ அப்படியே நாங்கள் போனமாதம் பார்த்த சைனாவை கண்ணுக்குள் கொண்டு வந்துள்ளது.
எள்ளளவும் மாற்றம் இல்லை…
அடுத்த கட்டம் நோய் மோசமாக பரவிய உடனே..
நோயாளிகள் அனைவரையும் ஷாப்பிங் பாக்கில் அடைத்து தீயிட்டு கொளுத்தியது இராணுவம்…
அவர்கள் உயிரோடு இருந்தாலும் நோய் அறிகுறி தெரிஞ்சால் கொன்றுவிடுவார்கள்..
இந்த சினிமாவின் பிற்பகுதி போல நோய் அதிகமாக பரவினால்..
அதிகமான டாக்டர்கள் நோய்வாய்ப்பட்டால்..
இராணுவத்தை இறக்கினால்..
அரோகாரா தான்
— முகநூலில் அலைபவன் ஐச்சு