ஒரு பக்கா ரஜினி இரசிகன் கிட்ட போய் அவர ஏன் பிடிக்கும்ன்னு கேட்டா எப்படி திணறி திணறி உளருவானோ அது மாதிரி தான் என்கிட்ட #GuyRitchie பத்தி கேட்டாலும்…
கிட்டதட்ட இவரோட எல்லா படமும் ‘கதை சொல்லி’ வடிவில தான் இருக்கும்.. நம்ம கௌதம் வாசுதேவன் மாதிரி ஆனா அந்த அளவுக்கு மொக்கயா ஒரு மூனு டெம்ப்லட்டை உருட்டி உருட்டி கழுத்தறுக்க மாட்டாரு நம்ம கய்!

“…..அப்படியே அந்த சீன் கட் பண்ணி ஃபிரேம் ஒரு குதி குதிச்சி இங்க மோடி 21 நாளைக்கு வெளிய வராதன்னு சொல்லும்போது.. அப்படியே அவரு வெள்ளை தாடியில zoom in பண்ணி…” இப்படி தான் கய் ரிட்ச்சி கிட்ட கொடுத்தா எட்டு மணிக்கு மோடி ஜீ பேசுரதையே வேற மாதிரி எல்லாரும் ஆர்வமா வாய பிளந்து பாக்குற மாதிரி பண்ணி உட்டுடுவாரு.

Style of makingல இவர காப்பி அடிக்கலாமே தவிர இவர அடிச்சிக்க இன்னும் யாரும் வரல.

இந்த படமும் அதுக்கு விதிவிலக்கில்ல.

இவரு படத்தில எல்லாரும் நிறைய பேசிகிட்டே இருப்பாங்க, அதுவும் பிரிட்டிஷ் இங்கிலீஸ்ல… கொஞ்டம் கூட சிரிக்காம.. ஆனா உத்து கேட்டு எப்படியாவது புரிஞ்சிட்டா நம்மல விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும், இந்த படமும்.

வழக்கம் போல பயங்கர வன்முறை காட்சிகள் இந்த படத்துலயும் இருக்கு, ஆனா எப்பவும் போல எதுவுமே கேமராவில காட்டாம QT படத்த ரொம்ப இரசனையா யாரோ சென்சார் கட் பண்ணா மாதிரி எதையும் காட்டாமலே அழகா அந்த அழுத்தத்த நமக்கு கடத்துற மாதிரியான ஃபிரேமிங் & எடிட்.

நம்ம தல Matthew McConaughey பின்னி பெடலெடுக்க போறாருன்னு பாத்தா முதல் காட்சியிலேயே அவர யாரோ சுட்டுடராங்க!

அதுக்கபறம் Charlie Hunnam ம்ம்ம்ம்.. சிறப்பு. மனுசன் நடிக்க கொடுத்த வாய்ப்பையெல்லாம் கடிச்சி கொதறிடறாரு. கொல பசியில (நடிப்பு பசி) இருந்திருப்பார் போல.

Colin Farrell அப்பப்ப வந்து கெத்து காட்டிட்டு போவ… திரும்ப Matthew McConaughey சாகப்போக… கடைசியா இவ்வளவு இரகளைக்கும் நடுவில குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு இருக்க Hugh Grantந்ன அலேக்கா அமுக்கி பிடிக்க… சுபம்!

இன்னடா இவன் முழு கதையும் சொல்லிட்டானேன்னா.. நான் இப்ப சொன்னதெல்லாம் கவனிக்க யாருக்கும் டைம் இருக்காது, அதுனால தெரிஞ்சிக்கிட்டு பாக்குறது தான் நல்லது.

கண்டிப்பா பாக்க வேண்டிய suspense comedy thriller படம் 👍👍👍

முகநூலில் Vinodh K Kamaraj.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.