1960 ல் உலகத் தலைவர்கள் மாநாடு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் சபை இருக்கும் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வந்து குவிந்தனர்​. தலைவர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டல்களை ஐ.நா ஏற்பாடு செய்திருந்தது. அப்போது க்யூப அதிபரான 34 வயது பிடல் காஸ்ட்ரோ ஐ.நா நிகழ்வுக்காக நியூயார்க் வருகிறார். அமெரிக்க அதிபர் #DwightEisenhower க்கு பயந்து கொண்டு காஸ்ட்ரோவுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் தங்க இடம் அளிக்க முடியாது என்று ஹோட்டல் நிர்வாகங்கள் கூட்டு முடிவு எடுத்திருந்தது.

ஐ.நா. மூத்த நிர்வாகிகளை சந்தித்த காஸ்ட்ரோ எனக்கு தங்க இடம் அளிக்க மறுக்கிறார்கள், எனவே நான் ஐ.நா. வளாகத்திற்குள் ஒரு டெண்ட் அடித்து தங்கப் போகிறேன் என்று அதிரடியாக சொல்கிறார். நிர்வாகிகள் பதற்றம் அடைந்தனர், என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. காஸ்ட்ரோவுக்கு ஆதரவு தெரிவித்தால் அமெரிக்க அதிபரின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடுமே என்று தயங்குகின்றனர். அப்போது தெரேசா ஹோட்டல் என்ற சாதாரண ஹோட்டல் உரிமையாளர் காஸ்ட்ரோவுக்கு இடம் அளிக்க முன் வருகிறார். அவரின் அன்புக்காக அங்கே தங்க சம்மதிக்கிறார் காஸ்ட்ரோ.

நியூயார்க் நகரம் முழுவதும் பல்வேறு நாடுகளுகளின் தலைவர்கள்​ சந்திப்பு நடந்து கொண்டிருந்தது. காஸ்ட்ரோ தங்கியிருந்த ஹோட்டல் மட்டும் வெறிச்சோடி இருந்தது. காஸ்ட்ரோவை சந்தித்தால் அமெரிக்காவின் மோசமான நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்று பயந்து கொண்டு மற்ற நாட்டு தலைவர்கள் காஸ்ட்ரோவை புறக்கணித்தனர். அப்போது, “காஸ்ட்ரோவை சந்திப்பதால் என்ன நடந்துவிடும், நான் அமெரிக்காவை சாரமாட்டேன், ரஷ்யாவையும் சாரமாட்டேன்…. எனக்கென்ன பயம் என்று சொல்லி அந்த இளம் தலைவனை சந்திக்க கிளம்பினார் இந்திய பிரதமர் நேரு.

காஸ்ட்ரோவின் அறைக்குள் நேரு நுழைந்தவுடன் பதற்றமாகிறார் இளம் தலைவர் காஸ்ட்ரோ. தவைவர்கள் சந்திப்பின் போது கடைபிடிக்கப்படும் சர்வதேச சம்பிரதாயங்கள் என்னவென்றே அப்போது அந்த இளம் தலைவனுக்கு தெரியாது….அந்த சந்திப்பை பற்றி காஸ்ட்ரோ சொல்கிறார்…..”அப்போது​ எனக்கு வயது வெறும் 34 மட்டுமே, என்னை பற்றி என் நாட்டு மக்களுக்குத்தான் தெரியுமே தவிர பிற நாட்டினருக்கு அவ்வளவு அறிமுகம் கிடையாத சமயம். அமெரிக்காவின் எதிர்ப்பு வேறு…. அப்படி இருக்கும் போது என்னை யாரும் சந்திக்க முன்வராத சூழ்நிலையில் நேரு போன்ற மாபெரும் தலைவர் வந்து சந்தித்தது எனக்கு ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தியது. அதனை உணர்ந்து கொண்ட அவர் என்னைப் பற்றி, நான் அடைந்த இலக்கை பற்றி உயர்வாக சொல்லி என்னை உற்சாகமூட்டி, பெருமிதத்தில் ஆழ்த்தினார். அதன் பிறகே என் பதற்றம் தனிந்து, அவருடன் உரையாடத் தொடங்கினேன், சர்வதேச அளவில் என்னை கௌரவபடுத்திய தலைவர் நேரு….

அதற்கு பிறகு காஸ்ட்ரோவை பல்வேறு நாட்டு தலைவர்கள் சந்தித்தனர். தலைமை பண்பு என்பது அமெரிக்காவின் அதிகாரத்திற்கு அடிபணியாதது.எப்போதும் பாதிக்கப்பட்டவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதே. நாமாக முன் வந்து உதவி செய்வது வேறு, மிரட்டலுக்கு அடிபணிவது வேறு. போராடி, தியாகம் செய்து, மதச்சார்பில்லாமல் வாழ்ந்த நேருவால்தான் அடக்குமுறைக்கு அடிபணியாமல் இருக்க முடிந்தது. மன்னிப்புக்கேட்டே பழகி, மதத்தால் பிழைப்பு நடத்தியவர்கள் வழியில் வந்த மோடியால் பயப்படாமல் இருக்க முடியாது. காஸ்ட்ரோவுக்கு தங்க இடம் கொடுத்த தெரேசா ஹோட்டல் ஓனருக்கு இருந்த கட்ஸ், ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு எப்போதும் இருக்காது…

Bala

Via – Surya Xavier

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.