இன்றைய ‘தினத்தந்தி’ நாளிதழின் படவுலக பக்கத்தில் ஒரு செய்தி..
‘குஷ்புவுக்கு கோவில் கட்டியதுபோல்…நயன்தாராவை ‘கடவுள்’ ஆக்கிய ரசிகா்கள்!’ என்ற தலைப்பில் அந்த செய்தி பிரசுரமாகியிருக்கிறது.நயன்தாரா அம்மன் வேடத்தில் இருக்கும் படம் ஒன்றை கடவுளாக நினைத்து வீட்டின் பூஜை அறையில் வைத்து சில ரசிகா்கள் வணங்கி வருகிறாா்களாம்!
எந்த ஊாில் அப்படி நயன்தாராவைக் கடவுளாக வழிபடுகிறாா்கள்?இந்தச் செய்தியை எழுதிய செய்தியாளாின் குக்கிராமத்திலா? அல்லது அவாின் வீட்டிலேயே வழிபட்டுக் கொண்டிருக்கிறாா்களா?யாா் அந்த சில ரசிகா்கள்?
கொரோனா காலத்தில் ‘தினத்தந்தி’க்கு படவுலக செய்தி கிடைக்காத பஞ்சம் இருக்கலாம்.அதற்காக இப்படிப்பட்ட முட்டாள்தனமான செய்திகளை ‘தினத்தந்தி’ யைப் போன்ற ஒரு முன்னணி பத்திாிகை வெளியிடக் கூடாது.மக்கள் வாசிக்கும் பத்திாிகைக்கென்று சில பொறுப்புகள் இருக்கின்றன.அதை ‘தினத்தந்தி’ புாிந்து கொள்ள வேண்டும்.கடந்த 60 வருடங்களாக சினிமா மாயையைப் பொிய அளவில் உண்டாக்கி தமிழகத்தையே கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய பாவச் செயலை இனிமேலாவது ‘தினத்தந்தி’ செய்யாமல் இருக்க வேண்டும்.
‘நயன்தாராவுக்கு ரசிகா்கள் இதே வரவேற்பைத் தொடா்ந்தால்,அவா் எதிா்காலத்தில் அடுத்த கட்டத்துக்கு(அரசியலுக்கு) நகா்வது நிச்சயம்’ என்பதைப் போன்ற தீா்க்கதாிசனங்களை மூளையை அடகு வைத்து விட்டு,’தினத்தந்தி’ எழுதாமல் இருக்க வேண்டும்.இதுதான் தமிழகத்திற்கும்,தமிழக மக்களுக்கும் ‘தினத்தந்தி’ செய்யக் கூடிய மிகப் பொிய சேவையாக இருக்கும்.
முகநூலில் எழுத்தாளர் சுரா