சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் கல்லூரியில் சித்த மருத்துவர் வீரபாபுவின் தலைமையில் கொரோனாவுக்கு சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 600 பேர் இங்கு அனுமதிக்கப்பட்டு 250 பேர் வரை சிகிச்சை பெற்று குணமாகிச் சென்றுள்ளனர். இதுவரை யாரும் இங்கு உயிரிழக்கவில்லை. கடுமையான மூச்சுத் திணறலுடனும் இங்கு வந்து சேர்ந்துள்ளனர் நோயாளிகள்.

இந்த சித்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு தனியார் அல்லோபதி மருத்துவமனைகள் போல் லட்சக்கணக்கில் பணம் கறப்பதில்லை. இலவசமாகவே மருத்துவம் செய்யப்படுகிறது என்பது இதன் சிறப்பு.

இங்கு சித்த மருத்துவ முறையில் நோயாளிகள் குணமாவது கண்டு வியாசர்பாடியிலும் இதேபோல 250 படுக்கைகள் கொண்ட இலவச கொரோனா சித்த வைத்திய சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டுள்ளது.

https://www.facebook.com/polimernews/videos/1489186901253165/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.