இன்று நான் இரு மருத்துவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அதில் ஒருவர், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வேலை செய்பவர். அவரிடம் “பாதுகாப்பாக இருக்கிறீர்களா, மருத்துவர்களுக்கும் பரவுகிறதா” என்று கேட்டேன்.
“இங்கு 20 முதல் 25 சதவிகித மருத்துவர்களுக்கு பரவும். பாசிட்டிவ் வந்தால் quarantine ஆகிவிடுவோம். பிறகு நெகடிவ் வந்தவுடன் மீண்டும் வேலையில் சேர்ந்து விடுவோம்“ என்று மிக சாதாரணமாக அதை கடந்து விட்டார்.
“எங்கள் அப்பார்ட்மென்டில் இருப்பவர்களுக்கே பாசிட்டிவ் வந்துவிட்டது என்ன செய்யலாம்” என்று கேட்டேன். “பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. வெளியில் போகும் போது மாஸ்க் போட்டுக்கொள்ளுங்கள். மாஸ்க் போட்டவர்களுடன் மட்டும் உரையாடுங்கள். இரண்டு மீட்டர் தள்ளி நின்று உரையாடுங்கள். ஐந்து நிமிடங்களுக்கு மேல் யாருடனும் பேசாதீர்கள். இதை செய்தீர்களானால் தொண்ணூற்றி ஒன்பது சதவிகிதம் உங்களுக்கு கொரோனா தொற்று பரவாது” என்றார்.
“அது ஏன் ஐந்து நிமிடத்திற்கு மேல் பேசக்கூடாது“ என்று கேட்டேன். “கொரோனா தொற்று உள்ள ஒருவரிடம் நீங்கள் பேசினாலே உங்களுக்கும் தொற்று வந்துவிடும் என்பது ஒரு myth. நீங்கள் வைரசுக்கு எக்ஸ்போஸ் ஆனாலே தொற்று வரும் என்றில்லை. எவ்வளவு எக்ஸ்போஸ் ஆகிறீர்கள் என்பது தான் முக்கியம். நீங்கள் குறைவான வைரசுகளை உட்கொண்டால் உங்களுக்கு பாதிப்பு இல்லை. அதிகமாக உட்கொண்டால் தான் தொற்று வரும், அதனால் தான் ஐந்து நிமிடத்திற்கு மேல் பேசாதீர்கள் என்றேன்” என்றார்.
“ஒரு முறை தொற்று வந்தால் அவர்களுக்கு திரும்ப வருமா?” என்றேன். “இந்த வைரசில் பல வகை உள்ளது. ஒரே ஸ்டிரெய்ன் வைரஸ் என்றால் வராது. வேறு ஸ்டுரெய்ன் என்றால் வரலாம், ஆனால் அதுவும் அரிது” என்றார். இது வரை அவர் பார்த்த கேஸ்களில் இரண்டு சதவிகிதம் கூட மறு தொற்று இல்லை என்றார்.
அடுத்து, எங்கள் அப்பார்ட்மென்டில் தொற்று வந்தவர்கள் சம்பந்தமான தகவல்களை கேட்டேன். தொற்று வந்தவர் வீட்டில் நான்கு பேர்கள். அவர்களில் இருவருக்குத் தான் தொற்று வந்திருக்கிறது. ஒரே வீட்டில் இருந்த போதும் இருவருக்கு பரவவில்லை என்பது முக்கியமான செய்தி.
சென்னையில் இருக்கும் எனது நண்பன் ஒருவனுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கேள்விப்பட்டு அவனிடம் பேசினேன். தொற்று உறுதியானதும் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவர் உதவியுடன் சிகிச்சை எடுப்பதாக சொன்னான். இரண்டு மூன்று நாட்கள் கடுமையான இருமல் இருந்ததாகவும், மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினான்.
இதை எல்லாம் கேட்கும் போது, இந்த கொரோனா என்பது கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்கும் வியாதி தானே தவிர இவ்வளவு பீதிக்கும் களேபரத்துக்கும் அது தகுதியானதில்லை என்று தோணுகிறது.
அதனால் எச்சரிக்கையாய் இருப்போம். பயமற்று இருப்போம். கொரோணா பாதித்தவரை வெறுத்து ஒதுக்காமல் மனிதநேயத்துடன் இருப்போம். சுலபமாய் கொரோனா காலத்தை கடப்போம்.
“இன்று ஆயிரம் புதிய கேஸுகள்”. “33 வயதே நிரம்பிய இளைஞர் கொரோனாவுக்கு பலி” போன்ற எதிர்மறை விஷயங்களை பரப்புவதற்கு பதிலாக நான் மேலே குறிப்பிட்டது போன்ற நேர்மறை செய்திகளை பகிரலாமே.
கொரோனா அச்சத்தினாலும், பொருளாதார ஸ்திரமின்மையினாலும் மன அழுத்தத்தில் இருக்கும் இன்றைய சமூகம் அதற்க்கு தானே ஏங்கிக்கொண்டிருக்கிறது.
–வாட்ஸப் பதிவு