தமிழ்நாட்டில் திராவிடம் என்கிற சொல் திராவிட இயக்கங்களின் கூற்றுப்படியே பார்த்தாலும் வழக்கொழிந்த ஒரு வார்த்தை என்றும், தமிழ்த்தேசியம் என்பது சுத்த இனவாதம் என்றும் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து,
வரலாற்றுப் பதிவுகளை முன்வைத்து திராவிடமா vs தமிழ்த்தேசியமா என்று காணொலி வழியே விவாதிக்கிறார்கள் தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் திரு கொளத்தூர் மணியும் , நாம் தமிழர் கட்சியின் திரு கல்யாண சுந்தரமும்.
பெரியார் தனித்தமிழ்நாடு வேண்டும் என்பதை கட்சியின் கொள்கையாக அறிவித்ததும், கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் மொழிவாரி மாநிலமாக பிரிந்து போனதையொட்டி பெரியார் மனம் மகிழ்ந்து, மொழிப்பற்று இனப்பற்று இல்லாத இந்த இனங்கள் தனி மாநிலங்களாக பிரிந்து போனதில் மிக்க சந்தோஷம் எனக்கு. இனிமேல் தமிழ்நாடு தமிழருக்கே என்று நன்றாக முழங்குவேன் என்று சொன்னதாக பதிவு செய்கிறார் கொளத்தூர் மணி அவர்கள்.
அவ்வாறு மொழிவாரி மாநிலங்களாகப் பிரிந்த பின் திராவிடம் என்கிற வார்த்தை அர்த்தமற்றது என்றும் தமிழருக்குப் பதில் திராவிடர் என்று உபயோகித்ததால் தமிழரின் இனப் பற்று வளர்வது தடுக்கப்பட்டது என்றும் விவாதிக்கிறார் கல்யாண சுந்தரம் அவர்கள்.
ஆரோக்கியமான விவாதம். காணத் தவறாதீர்கள்.