கமல் நடித்த அன்பே சிவம், விஜய் நடித்த பகவதி, பிரியமுடன், அஜித் நடித்த உன்னைத் தேடி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் லட்சுமி மூவி மேக்கர்ஸ்.

மேலும் கார்த்திக் நடித்த கோகுலத்தில் சீதை, சூர்யா நடித்த உன்னை நினைத்து, தனுஷ் நடித்த புதுப்பேட்டை, சிம்பு நடித்த சிலம்பாட்டம், ஜெயம் ரவி நடித்த தாஸ், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிறுவனத்தை 3 பேர் நிர்வகித்து வந்தனர். இந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநான் பல படங்களில் நடித்துள்ளார்.

வடிவேலுடன் இவர் நடித்த இது உங்கள் சொத்து என்ற பஸ் காமெடி பிரபலம். இது பலருக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் சுவாமிநாதன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துவிட்டார்.

இவரின் மகன் அஸ்வின் ராஜா என்பவர் ‘கும்கி’ மற்றும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படங்களில் நடித்துள்ளார். அஸ்வினுக்கு 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.