ஈழத்தமிழரின் இனப்படுகொலை வரலாற்றில் அனைவரையும் கலங்கடித்த ஒரு படுகொலை, ’செஞ்சோலை படுகொலை’ எனப்படும் செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தில் சிங்கள ராணுவம் குண்டுகள் வீசிக் குழந்தைகளை கொன்ற தினம் தான். சிங்கள பேரினவாதம் எவ்வளவு கொடிய இனப்படுகொலையாளர்கள் என்பதற்கு முக்கியச் சான்றுகளில் மாஞ்சோலையும் ஒன்று.

2006 ஆகஸ்ட் 14ஆம் நாள் காலை 7மணிக்கு முல்லைதீவு மாவட்டம் வல்லிபுனத்தில் உள்ள ’செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தில் சிறுமிகளுக்கான தலைமைதிறன்,ஆண் பெண் சமத்துவம், முதலுதவி உள்ளிட்டவைகள் குறித்து வருடம் தோறும் நடக்கும் 10நாள் பயிற்சி பட்டறைகளில் கலந்து கொள்வதற்காக தமிழ் ஈழத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 500க்கும் அதிகமான சிறுமிகள் கலந்துகொண்டனர். .

இதனை தெரிந்து கொண்ட சிங்கள பேரினவாத அரசு பயிற்சி பட்டறையின் மூன்றாம் நாள் நிகழ்வின் போது அதாவது ஆகஸ்ட் 14ஆம் நாள் காலை 7மணிக்கு 16 குண்டுகளை கிபீர் விமானம் மூலம் தொடர்ச்சியாக போட்டது. இந்த தாக்குதலில் 61சிறுமிகள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே கொலை செய்யப்பட்டனர். 155க்கும் மேற்பட்ட மாணவிகள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலபேருக்கு உடலுறுப்புகள் இல்லாமல் போனது தனி சோகக் கதை.

மருத்துவமனைகள், பள்ளிகள் இவற்றின் மீது குண்டுபோடக்கூடாது என்பது சர்வதேச விதி. அது போர்க்குற்றம். அப்படியிருக்கும் போது பள்ளிக்கூடமென்று தெரிந்தே சிங்கள் பேரினவாதம் குண்டுகளை போட்டது. இது குறித்து அப்போது கருத்து சொன்ன சிங்கள இராணுவ செய்தி தொடர்பாளார் கெஹகிலிய ரம்புக்வெல
’அரசுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் அவர்கள் வயது வித்தியாசம் பாலினம் பார்க்காமல் கொல்வோமென்று’ வெளிப்படையாக அறிவித்தார். அதேபோல அப்போதைய அதிபர் இனப்படுகொலையாளன் இராசபக்சேவும் இவர்கள் அனைவரும் அந்தச் சிறுவர்கள் போராளிகள் என்ற பொய்யை திரும்ப திரும்ப சொன்னான். ஆனால் உண்மை அறியும் குழு போர்நிறுத்தக்குழு, யூனிசெப் போன்ற அமைப்புகள் களத்தில் சென்று விசாரித்து இவர்கள் குழந்தை போராளிகள் இல்லை என்றும், அப்பாவி தமிழ் மாணவிகள் தான் என்றும் சொன்னது.

மேலும் செஞ்சோலை என்பது ஐநா அமைப்பினால் ஏற்கனவே மாணவர் பயிற்சி பட்டறை நடக்கும் இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதை சிங்கள பேரினவாத அரசும் ஒத்துகொண்டு பதிவும் செய்யப்பட்ட இடம். ஆகவே தாக்குதல் தெரியாமலோ தவறுதலாகவோ நடந்தது இல்லை. திட்டமிட்டு தமிழ் மாணவிகளை கொல்ல வேண்டுமென்பதற்காகவே நடத்தப்பட்ட தாக்குதல்.

இதனை ஐநா மற்றும் உலக நாடுகள் அப்போதே கண்டித்து இலங்கை இனப்படுகொலை அரசை தண்டித்திருந்தால் 2009இல் மாபெரும் தமிழினப்படுகொலையே நடந்திருக்காது.அனால் சர்வதேசம் தமிழ் சிறுமிகளின் படுகொலையை கண்டும் காணாமல் இருந்துவிட்டு மாபெரும் இனப்படுகொலைக்கும் துணைபோய்விட்டது.

இந்த கோர இனப்படுகொலை நடந்த 14ஆண்டு நாள் நினைவு நாள் இன்று. இந்த நாளில் “தமிழினப்படுகொலையின் குற்றவாளிகளை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்க்கும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தவும் தொடர்ந்து போராடுவோம் ” என்பதே இந்நாளில் நாம் எடுத்துக்கொள்ளும் சூளுரையாக இருக்கும்.

’தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

மே17 இயக்கம்
9884072010

YouTube player
செஞ்சோலை படுகொலைகள் – பாகம் 1
YouTube player
செஞ்சோலை படுகொலைகள் – பாகம் 2

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.