பெரியார் கடவுள் இல்லை என்றவர்,,கடவுளை மறுத்தவர்,,,அவரது திராவிடர் இயக்கத்தின் கொள்கையும் அதுவே,,,,
ஆக அதனால் தான் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைப்பதையும்,,சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்வதையும் பெரியாரிய இயக்கங்கள் எதிர்க்கின்றனவா??
இல்லவே இல்லை !!
அப்படி கடவுள் இல்லை என்ற கொள்கைக்காக தான் விநாயகர் சதுர்த்தியை எதிர்ப்பதாக இருந்தால்,,, அய்யனார்,கறுப்பராயன்,மாரியம்மன்,முருகன் என எத்தனையோ சாமிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் எடுக்கப்படுகின்றன,,,அந்த விழாக்களை எல்லாம் நடத்தக்கூடாது என்று பெரியாரிய இயக்கங்கள் எதிர்ப்பது இல்லையே !!
பகுத்தறிவு என்ற ரீதியில் அனைத்து கடவுள் வழிபாட்டின் மீதும் விமர்சனங்கள் இருந்தாலும் மேற்கூறிய எந்த சாமிக்கும் விழா எடுக்கக்கூடாது,,கொண்டாடக் கூடாது என எதிர்த்ததில்லை,,,,
பிறகுஏன்விநாயகர்சதுர்த்திஎதிர்ப்பு_மட்டும் ???
பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டத்தை கூட கடவுள் மறுப்பு என்ற ரீதியில் பெரியார் நிகழ்த்தவில்லை,,,அது நேரடியாக வடநாட்டில் இருந்து கலவரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இறக்குமதி செய்யப்படும் பண்பாட்டு திணிப்பு என்ற ரீதியில் தான் நடத்தினார்,,,,
எப்படி இந்தி எதிர்ப்பு என்பது மொழி திணிப்பு எதிர்ப்போ,,,அப்படித் தான் ராமன்,விநாயகன் என்பது பண்பாட்டு திணிப்பு எதிர்ப்பு,,,,
நீங்களே நல்லா யோசியுங்க !!
எந்த ஒரு இடத்திலாவது சாதாரண பொது மக்கள் விநாயகர் சிலையை பொது இடத்தில் வைத்து,பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று கறைப்பதை எல்லாம் செய்ததுண்டா??
முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி ,இந்து மக்கள் கட்சி,விஸ்வ இந்து பரிசத் என ஏதாவது ஒரு பெயரில் இயங்கும் இந்துத்துவ இயக்கங்கள் தான் நடத்தும்,,,,
ஆக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்பது முழுக்க முழுக்க இங்கே இந்துத்துவ அரசியலின் வெளிப்பாடு தானே ஒழிய,,,இதில் ஒரு துளி கூட பக்தியோ,ஆன்மீகமோ இல்லை என்பதே நிதர்சனமான உண்மை !!
அதுக்கு ஒரு எளிய டெஸ்ட் வெச்சுப்போம்
உங்கள் பகுதியில் இந்துத்துவ அமைப்பில் இருந்து கொண்டு,,இந்த விநாயகர் சதுர்த்தியை மட்டும் கொண்டாடும் நபர்கள் வருடத்தின் ஏனைய நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என ஒரு நிமிடம் கண்ணை மூடி நினைத்துப் பாருங்கள்,,,
அவர்களுக்கும், ஆன்மீகத்திற்கும் எதாவது ஒரு துளி சம்மபந்தம் இருந்ததா??
நிச்சயம் இருக்காது !!
ஆண்டு முழுவதும் கட்டபஞ்சாயத்து,, குடி,
-போதை,, சமூக விரோத செயல்கள் என ஈடுபடும் நபர்களாக தான் இருப்பார்கள்,,,
அப்படிப்பட்ட நபர்கள் எல்லாம் சேர்ந்து விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைப்பதையும், சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்வதையும் பக்தியாக கொள்ள முடியுமா ??
ஆக இந்த விநாயகர் சதுர்த்தி என்பது முழுக்க முழுக்க மதக் கலவரங்கள் நடத்துவதற்கும்,,,சமூக பதற்றத்தை ஏற்படுத்தவும்,,,வசூல் என்ற பெயரில் அப்பாவி மக்கள்,வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பதற்கும் தான் நடத்தப்படுகிறது என்பதை அறிவுசார்ந்த தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து,,,இந்த நிகழ்வை முற்று முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் !!
தேசபக்தியும் இந்துவும் ஒன்றா?
![](https://hellotamilcinema.com/wp-content/uploads/2020/08/vinayagar-chathurthi-hindutva1.jpg)
இது போன்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகளிலும், ஊர்வலங்களிலும் விநாயகர் சிலை முன் தேசபக்தி சம்பந்தப்பட்ட ராணுவம், ஆயுதங்கள், போர் விமானங்கள் போன்றவற்றையும் இந்துத்துவா வாதிகள் வைத்து வழிபடுவார்கள். இது பிஜேபி-RSS செய்து கொண்டு இருக்கும் ஒரு எரிச்சலூட்டும் விஷயம்; ஆபத்தும் கூட….மத வழிபாட்டில் எதற்கு சம்மந்தம் இல்லாமல் ராணுவ தளவாடங்களின் மாதிரிகளை வைப்பதின் அர்த்தம் என்ன..?
தங்கள் ஹிந்துத்துவா கொள்கைகளை பரப்ப தேசபக்தியையும் + ராணுவத்தையும் தோதாக சேர்த்து பிரச்சாரம் செய்யும் யுக்தி… இந்துத்துவாவும் தேசபக்தியும் ஒன்றே என ஒரு கருத்தியல் கட்டமைப்பு செய்யத் தொடங்கியதும் இந்தப் புள்ளியிலிருந்துதான்.
ஒரு சாமானிய சராசரி இந்துவின் மனதில் இருக்கும் நாட்டுப் பற்றுடன் இந்துத்துவ வெறியையும் பகையையும் கலந்து, படிப்படியாக மாற்று மத வெறுப்பு வளர்த்து அதன்வழியாகத் தாங்கள் எதிர்காலத்தில் செய்யப்போகும் கொடூரமான குற்றங்களுக்கு மக்களை உடந்தையாக்குவது தான் இதன் அடிப்படை.
யூதர்களை லட்சக்கணக்கில் படுகொலை செய்ய ஜெர்மானியர்களை ஹிட்லர் அப்படித்தான் உடந்தையாக்கினார். தேசம், தேசபக்தி, தேச விரோதிகள் என்ற சொல்லாடல்களைத் தங்கள் மதவாத ஒற்றை அரசியலுக்கான கருவிகளாக அவர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தேசபக்தியும் , இந்துவும் ஒன்றல்ல. இரண்டும் கலக்கப்படும் போது நம்முடைய உணர்வுகள் தூண்டப்படுவது எளிது என்பதை உணர்வோம். தெளிவோம்.