யாரிடமாவது பதில் இருக்கிறதா?

1.எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?

  1. ரபேல் கோப்புகள் ஏன் மாயமானது? விஜய் மல்லையா சம்பந்தப்பட்ட ஆவணங்களும் காணாமல் போனது. ஏன்?
  2. பாஜக மீது கேள்வி கேட்கும் நீதிபதிகளின் மீது மட்டுமே கற்பழிப்பு புகார்களும் கொலை மிரட்டல்களும் கொலையும் செய்யப்படுவது ஏன்?
  3. மோடியை பிரமோட் செய்ய பயன்படுத்தப்பட்ட 10000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட…
  4. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?
  5. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டு கூறியவுடன் அவர்கள்மீது மட்டும் வருமானவரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகள் மாயமாவது ஏன்?
  6. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை?
  7. பல லட்சம் கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கியதாக சொல்லப்பட்ட கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசாகூட மீட்கப்படவில்லை? குறைந்தபட்சம் கருப்பு பணம் பதுக்கியவர் பட்டியலைகூட வெளியிட முடியவில்லை?
  8. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்பு பணமாக இருந்தவை பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டு பணமாக மாறிய மர்மம் என்ன? ஜூ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?
  9. ஏன் நாட்டின் பாதுகாப்பு துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகிறது?
  10. கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 2 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?
  11. மோடி பல்லாயிரம் கோடி அரசு பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்கு செல்வது முதலீடுகளை ஈர்க்கதான் என்றால் ஏன் இதுவரை ஒரு பைசாகூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?
  12. மோடியின் வெளிநாட்டு பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?
  13. மோடியின் வெளிநாட்டு பணம் இந்தியாவிற்கு முதலீடுகளை கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராக செல்கிறாரா?
  14. இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் லாபத்தில் இயங்கிய ரயில்வே தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்து ஏன்?
  15. பெட்ரோல் மீதான 300 சதவீதம் இலாபம் அரசுக்கு மட்டுமே நோக்கம் என்றால் இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்?
  16. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல்கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்?
  17. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?
  18. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள் பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?
  19. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்தவிதமான நஷ்டம் ஏற்பட்டது?

வாட்சப் பதிவு

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.