வட இந்தியாவில், தனிஷ்க் நகைக்கடை நிறுவனத்தின் புதிய மதநல்லிணக்க விளம்பரத்தை லவ் ஜிகாத் என்று வெறுப்பரசியல் பேசி வாபஸ் பெறவைத்த சங்கிகள்.

தீபாவளியை ஒட்டி தனது புதிய நகைக் கலெக்ஷன்களுக்காக தனிஷ்க் நிறுவனம் வட இந்திய ஹிந்தி சேனல்களில் ஒரு விளம்பரம் வெளியிட்டது. அதில் ஒரு இந்து மருமகள் தனது முஸ்லீம் மாமியாரை சந்திக்க வரும்போது, அவரை வரவேற்ற மாமியார், நிறைமாத கர்ப்பிணியாய் இருக்கும் மருமகளுக்கு இந்து முறைப்படி சீமந்தம் நடத்துகிறார் என்பது போல வரும்.

மத நல்லிணக்கத்தைப் பேசிய இந்த விளம்பரத்தை, முஸ்லீம்கள் இந்துக்களை ஏமாற்றி கல்யாணம் செய்துகொள்ளும் லவ் ஜிகாத்தை பெருமைப்படுத்தும் விளம்பரம் என்று கூறி ட்விட்டர் மற்றும் வலை தளங்களில் #boycotttanishq என்று சங்கிகள் ட்ரண்டிங் செய்ய, அதை மோடி அரசும் ஊதிக் காட்ட, வேறு வழியின்றி ஒரு வாரத்தில் அந்த விளம்பரத்தை நீக்கிவிட்டது தனிஷ்க் நிறுவனம்.

மோடி அரசால் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்ட கங்கனா ரணாவத் மேடம் எல்லாம் இந்தப் வெறுப்பரசியல் போராட்டத்தில் செலிப்ரிட்டி வாய்ஸ் கொடுத்தார்கள்.

பம்பாய் படத்தில் மணிரத்னம் ஏன் மனீஷா கொய்ராலாவை முஸ்லீமாகக் காட்டினார் , என்று படம் வெளியான போது சில ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினார்கள். இப்போது அதற்கு விடை கிடைத்திருக்கிறது.
 
ஒரு இந்து ஆண் முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்வது லவ் ஜிகாத் அல்லவாம்.
ஆனால் முஸ்லீம் ஆண் இந்துப் பெண்ணைத் திருமணம் செய்வது மட்டும் லவ் ஜிகாத்தாம்.
இவ்ளோதான் சங்கிகளின் குறுகிய நோக்கமும், மதவெறுப்பு அரசியலும்.

இணைப்பில் இந்த விளம்பர வீடியோவை நீங்களும் பாருங்கள்.

YouTube player

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.