மனுதர்மநூலைஆங்கிலத்தில்மொழிபெயர்த்தவர்சர்வில்லியம்_ஜோன்ஸ்
(1794)

சூத்திரர்களும், சண்டாளர்களும் “தனது கால் தடத்தை தானே அழித்துக்கொண்டு செல்ல வேண்டும். எச்சில் துப்ப கழுத்தில் கலையம்”.

மனுதர்ம ஆட்சியின் போது #தலித் மக்களுக்கு எங்கெல்லாம் #தடைகள் இருந்தது??

1.பொதுக்கிணற்றில் நீர் எடுக்க தடை.
2. சுடுகாட்டில் தம் பிணம் எரிக்கத் தடை.
3. குளங்களில் குளிக்க தடை.
4. தெருக்களை பயன்படுத்த தடை.
5. மேற்சட்டை, வேட்டி, சால்வை அணிய தடை.
6. மீசை விடத்தடை.
7. தாவணி, தங்க ஆபரணங்கள் போடத்தடை.
8. செருப்பு அணிய தடை.
9. குடுமி, கடுக்கண் போட தடை.
10. ரயில் பயணிக்க தடை.
11. பேருந்துகளில் இருக்க தடை.
12. பாடசாலையில் படிக்க தடை.
13. கோவில் பயன்படுத்த தடை.
14. பொது நிறுவனங்களில் உட்புக தடை.
15. மருத்துவ வசதி தடை.
16. வேற்று உழைப்பு வழிமுறை தடை.

* இவையெல்லாம் இந்த மண்ணில் பல சமூகம் அனுபவிக்க காரணமே இங்கிருந்த மனுதர்ம ஆட்சி முறைகளே..

* இத்தனை தடைகளையும் ஒரு சமூகம் 2000 ஆண்டுகளாக அனுபவித்த கொடுமை உலகில் எங்கேனும் உண்டா??

* 70 ஆண்டுகால அரசியலைமைப்பை இவர்களால் சகித்துக் கொள்ள இயலாத போது .. 2000 ஆண்டுகால மனுதர்ம கொடுங்கோல் ஆட்சி முறைகளை எப்படி ஒடுக்கப்பட்ட மக்களால் ஏற்றுக்கொள்ள இயலும்??

* சொந்த மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு அரசு இடம் ஒதுக்கி வீடு கொடுக்கும் நிலைக்கு தள்ளியது இந்த மனுதர்ம ஆட்சி முறையால் தான்.

* இந்த மனுதர்ம நூல் 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது.

* இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

இன்றும் ஊர்க்குளத்தில் நீர் எடுப்பதற்கும், சுடுகாட்டில் பிணம் எரிப்பதற்கும், கோவிலில் நுழைவதற்கும் தாழ்த்தப்பட்டவர்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்த நிலை மாறவேயில்லை எனும் போது மனுஸ்மிருதி வழக்கொழிந்து போனது என்று நாம் உறுதியாகச் சொல்லமுடியுமா?

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.