ஈழத்தில் தொடர்ச்சியாக சிங்கள அரசு தமிழையும், தமிழினத்தையும் ஒடுக்கி அழிப்பதற்கான வேலைகளை தொடர்ந்து செய்தே வருகிறது. புலிகளை அழித்தாலும் சிங்கள இனவாத வெறி அடங்கவேயில்லை.
சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை நள்ளிரவோடு இரவாக யாழ்ப்பாண துணைவேந்தரை மிரட்டி ராணுவம் கொண்டு இடித்தது சிங்கள அரசு. அதற்கு நாடெங்கும் எதிர்ப்புகள் கிளம்பியதும், இந்திய அரசு அதில் தலையிட்டதும் பணிந்து மீண்டும் நினைவிடத்தை கட்டிக் கொடுப்பதாக அறிவித்திருக்கிறது சிங்கள அரசு.
அதே போல சமீபத்தில் இலங்கை சுதந்திர தின விழாவில் இனி தமிழ்த் தேசிய கீதம் பாடப்படாது என்று அறிவித்து தமிழ் தேசியகீதம் பாடாமல், சிங்கள தேசியகீதம் மட்டும் பாடப்பட்டதும் எனத் தொடர்ந்து தமிழின எதிர்ப்பு வேலைகள் தொடர்வதும், தமிழீழ மக்களின் பொருளாதாரம், வேலை வாய்ப்புகள் போன்ற எந்த விஷயங்களுக்கும் முன்னெடுப்புக்கள் நடத்தப்படாமல், தமிழரின் நிலங்கள், இடங்கள், பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக ராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதுமான நெருக்கடிகள் தமிழரை மீண்டும் போராடும் நிலைக்குக் கொண்டுவந்துள்ளன.
அமைதி வழியில் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த புலிகளின் தளபதி கர்ணல் திலீபனின் நினைவு நாளையொட்டி மீண்டும் வடக்கு, கிழக்கு அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து ஜனநாயகப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதையொட்டி நடந்த மாபெரும் ஊர்வலத்தைப் பற்றிய காணொலி கீழே.