தந்தை ஷங்கருக்கு துளியும் விருப்பம் இல்லாத நிலையில் அடம்பிடித்து வெள்ளித்திரையில் முத்திரை பதிக்க வருகிறார் அதிதி ஷங்கர்.

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தொடர்ந்து வித்தியாசமான களங்களில், ஓரளவு சுமாரான கதைகளைக் கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் தற்போது “விருமன்” என்று தலைப்பிடப்பட்ட புதிய படத்தைத் தயாரிக்கிறது. இதில் கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து
சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி மீண்டும் இணைகிறார்.

இப்படத்தை, தொடர்ந்து ஜாதிவெறிப் படங்களை இயக்கிவரும் முத்தையா இயக்குகிறார்.

‘கொம்பன்’ படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி(அறிமுகம்) (இவர்தான் இயக்குநர் ஷங்கர் மகள்) மற்றும் பலர் நடிக்கின்றார்கள். இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையைச் சொல்லும் குடும்பத்திரைப்படமாக உருவாகவுள்ளது.

இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார்.

‘மாநகரம்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.கே.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு சண்டைக் காட்சிகளை அமைக்கின்றார்.

சூர்யா குடும்பமும் இயக்குநர ஷங்கர் குடும்பமும் தி.நகரில் அருகருகே வசிக்கிறார்கள். எனவே தந்தை கொஞ்சமும் சம்மதம் தெரிவிக்காத நிலையில் கார்த்தியிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்து நடிப்பு வாய்ப்பை வாங்கியிருக்கிறாராம் அதிதி ஷங்கர்.

‘கிளாமராக நடிப்பீர்களா ? என்று கேட்டால் ‘எனது தந்தையின் படத்தில் வரும் கதாநாயகிகள் எந்த அளவுக்கு கிளாமராக நடிப்பார்களோ அந்த அளவுக்கு நானும் கிளாமராக நடிப்பேன்’என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.