கொரோனா காலத்தில் சித்த மருத்துவத்தின் மூலமாக கொரோனா நோயில் இருந்து பலரையும் காப்பாற்றிய சித்த மருத்துவரான K.வீரபாபு தற்போது ‘முடக்கறுத்தான்’ என்னும் புதிய படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடிக்கிறார். கதையின் நாயகியாக மஹானா நடிக்கிறார்.

எழுத்து – இயக்கம் – K.வீரபாபு, தயாரிப்பு – வயல் மூவிஸ், இணை இயக்குநர் – மகேஷ் பெரியசாமி, ஒளிப்பதிவு -அருள் செல்வன், இசை –சிற்பி, தயாரிப்பு நிர்வாகம் – வேதா ரவி, ECR அன்பு, பாடல்கள் – பழனி பாரதி, படத் தொகுப்பு –ஆகாஷ், சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், கலை இயக்கம் – பிரபஞ்சன், விளம்பர வடிவமைப்பு – ப்லெஸ்சன், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. படக் குழுவினருடன், சிறப்பு அழைப்பாளராக சுரேஷ் காமாட்சி மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

விழாவில் நடிகரும், இயக்குநருமான வீர பாபு பேசும்போது, “சிறு வயதிலிருந்தே சினிமா மீது எனக்கு ஆர்வம் அதிகம். இந்தத் துறையிலும் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது அது நிஜமாகி உள்ளது.

குழந்தைகளின் வாழ்க்கையை முடக்கும் கயவர்கள் பற்றிய கதைதான் இந்த ‘முடக்கறுத்தான்’ திரைப்படம். நிறைய குழந்தைகள் பல்வேறு சூழ்நிலை காரணமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கான முழுக்க முழுக்க ஒரு அமைப்பு, திட்டம் உருவாக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. குழந்தைகளுக்கான பல பாதுகாப்பு அமைப்புகள் உள்ளது. அது இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும்.

இந்தப் படத்தை ஒரு பார்வையாளனாக பார்த்து சொல்கிறேன். இந்த படம் கண்டிப்பாக மிகப் பெரிய வெற்றி அடையும்…” என்றார்.

கொரோனா காலகட்டத்தில் இலவச சிகிச்சை தருகிறேன் என்கிற பெயரில் கோடிகோடியாக சம்பாதித்த பணத்தில்தான் இப்படத்தைத் தயாரித்து நடித்து இயக்கியிருக்கிறார் என்பது ஒரு கொசுறு தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.