தமிழ்நாட்டுக்கு ஆர்.என். ரவி என்பவர் கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து வந்த 3 கவர்னர்கள் மாற்றப்படும் உத்தரவில் இவரும் ஒன்று. ஏற்கனவே தமிழ்நாட்டு கவர்னராக இருந்த பாலியல் சர்ச்சைகளில் சிக்குண்ட பன்வாரிலால் புரோகித்தை சத்தமில்லாமல் குஜராத்துக்கு கவர்னராக இடம் மாற்றியிருக்கிறது பாஜக அரசு. ஆர்.என்.ரவியை எதற்காக திடீரென்று தமிழ் நாட்டுக்கு கவர்னராக நியமித்திருக்க முடியும் என்பதுதான் புரியவில்லை.

ரவி கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரி. ஐபி எனப்படும் இன்டலிஜென்ஸ் பீரோ – உளவுத் துறையில் சிறப்பு இயக்குநராக இருந்தவர். 2012இல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, மோடி அரசு பதவிக்கு வந்ததும், NSCN (IM) எனும் நாகாலாந்து தீவிரவாத இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் interlocutor குழுவில் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவருடைய முன்னெடுப்பில் 2015இல் தீவிரவாத இயக்கத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. மோடி வெகு விமரிசையாக விளம்பரப்படுத்திக் கொண்ட அந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் இன்றுவரை யாருக்கும் தெரியாது. பிறகு, 2019இல் ரவி நாகாலாந்து கவர்னராகவும் நியமிக்கப்பட்டார்.

அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளையும் சேர்த்து தனி நாடாக நாகாலிம் என்ற நாடு வேண்டும் என்பதுதான் நாகா தீவிரவாதிகளின் கோரிக்கை. 2015இல் போடப்பட்ட Naga Framework Agreement என்ற அந்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்று பக்தர்களிடம் கேட்டுப் பாருங்கள். பிம்பிலிக்கி பிலாப்பி என்று சொல்ல முடியாமல் கண்டதையும் உளறுவதைப் பார்க்க சுவாரசியமாக இருக்கும். சரி, அது கிடக்கட்டும்.

நாகாலாந்தில் பல தீவிரவாதக் குழுக்கள் இருநதாலும், NSCN (IM) – National Socialist Council of Nagaland (Isak-Muivah) குழுவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்கள் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு முன்வந்தார்கள் என்பது ரவியின் (அரசுத் தரப்புக்) கூற்று. இது ஒருவகையில் பிற அமைப்புகளை அங்கீகரிக்காமல் புறக்கணித்து வலுவிழக்கச் செய்யும் முயற்சியாகவும் கருதலாம்.

NSCN (K) என்றும் ஒரு தீவிரவாதக் குழு உண்டு. ஆனால், அது தீவிரவாதக் குழு எனத் தடை செய்யப்பட்டது. ஆனால் NSCN (IM)- குழுவை ஊடுருவல் குழு என்று மட்டுமே அறிவித்துள்ளது ஒன்றிய அரசு. எங்கே தீவிரவாதச் சம்பவங்கள் நடந்தாலும் NSCN (K) மீது குற்றம் சுமத்தப்படும். NSCN (IM) அரசின் செல்லத்துக்குரிய தீவிரவாதக் குழு.

NSCN (IM) என்பதில் IM என்பது Isak Chishi Swu, Thuingaleng Muivah ஆகிய இரண்டு பேரைக் குறிக்கும். இவர்களில், குழுவின் தலைவராக இருந்த ஐசாக் 2016இல் இறந்து விட்டார். 2019இல் Qhehezu Tuccu தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நாகாலாந்தின் பல பகுதிகளிலும் கல்வி, பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, வெளியுறவுத்துறை, தகவல் என பல அமைச்சகங்களைக் கொண்டு இணைஅரசு நடத்திக் கொண்டிருக்கிறது NSCN (IM). அரசு ஊழியர்கள் தமது ஊதியத்தில் 12% வரியாகச் செலுத்த வேண்டும். வர்த்தகர்கள் குறைந்தபட்சம் 5% வரி செலுத்த வேண்டும். இதுதவிர, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், வங்கிக் கொள்ளை என பல வழிகளிலும் பணம் பண்ணலாம்.

See the source image

இதில் சிறப்பு என்னவென்றால், இரண்டு குழுக்களுமே இந்தியாவின் தலமையை ஏற்க மாட்டோம், நாகாலாந்து தனிநாடு என்று கோருபவை.

நாகாலாந்தில் ஆட்சியில் இருப்பது பாஜக கூட்டணி. தீவிரவாதிகளின் மிரட்டல், பணம் பறித்தல் அளவுக்கு மீறிப் போகிறது, தீவிரவாதிகளின் இணை அரசு நடக்கிறது என்று சட்டம் ஒழுங்கு நிலமை குறித்து ஆட்சியில் இருக்கும் அரசை ரவி விமர்சனம் செய்திருக்கிறார். (தீவிரவாதிகளின் இணை அரசு நடப்பது இப்போதுதான் தெரியுமா என்ன?)

பேச்சுவார்த்தைக்கான நடுவர் பொறுப்பிலிருந்து ரவியை நீக்க வேண்டும் என்று 2020 ஆகஸ்ட் முதல் NSCN (IM) கோரி வந்திருக்கிறது. “எமது ஆட்களை ஆயுதமேந்திய கும்பல் என்று கவர்னர் சொல்கிறார்” என்பதும் ரவி மீது NSCN (IM) வைக்கும் குற்றச்சாட்டு!

ஆக, நாகாலாந்தில் ஆட்சியில் இருப்பவர்களை திருப்திப்படுத்தவும், தீவிரவாதக் குழுவைத் திருப்திப் படுத்தவும் அவரை அங்கிருந்து தூக்கியிருக்கலாம். தூக்கியவரை எங்கே நியமிப்பது என்ற கேள்வி வரும்போது, பாரதிய ஜல்சா பார்ட்டி அரசு, இப்போதைக்குத் தலைவலி தரப்பட்ட வேண்டிய சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். பிரதமருக்கு ரொம்பவும் பிடித்தமான அஜித் தோவலுக்குப் பிடித்தமானவர் ரவி என்பது இன்னொரு காரணமாக இருக்கலாம்.

நாகாலாந்தில் தீவிரவாதிகள் இணை அரசு நடத்துகிறார்கள் என்று சொன்னவர் தமிழ்நாட்டில் இணை அரசு நடத்தாமல் இருப்பார் என்று நம்புவோம். 2019ஆம் ஆண்டிலிருந்து இவர் நாகாலாந்தின் ஆளுநராக இருந்து வருகிறார். தற்போது தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இவர் அரசியல்வாதி அல்ல. குறிப்பாக காவி கட்சியின் நபர் அல்ல. முழுக்க முழுக்க உளவுத்துறையில் இருந்து தேசிய இனங்களை பலவீனம் ஆக்கும் துறையில் கை தேர்ந்த நபர்.

முன்னாள் ஐ.பி தலைவர். உள்நாட்டு பாதுகாப்புக்கான பாராளுமன்ற குழுவின் முன்னாள் தலைவர். நாகலாந்து ஆளுநராக இருந்த போது தனி நாடு கேட்டு போராடிய குழுக்களை பிரித்து பலவீனம் ஆக்கிய நபர்.

சீன அச்சுறுத்தல் இருக்கும் நிலையிலும் மிக மிக முக்கிய நபரை வட கிழக்கு பகுதியில் இருந்து அகற்றி தமிழ்நாட்டிற்கு ஆளுநராக நியமித்து இருப்பதை வைத்து நாம் சில விடயங்களை தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் மாநில உரிமைக்கான , தனிநாட்டிற்கான கோரிக்கைகள் வலுவாக எழும் என இந்திய அரசு நம்புகிறதோ என்று தோன்றுகிறது.

ஏற்கனவே தமிழ்நாட்டை மிலிட்டரி காரிடார் ஆக்கப்போவதாக அதாவது ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, ராணுவ மையங்கள் அமைத்தல் என்று பல வகைகளிலும் ராணுவம் சம்பந்தமான தொழில்கள், குடியிருப்புக்கள், தளங்கள் என்று அமைக்க திட்டமிட்டுள்ளது  இந்திய ஒன்றிய அரசு. இது எதுபோலவெனில், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவத்தின் தளங்களையும், குடியிருப்புக்களையும் கட்டி அங்கே ஈழத் தமிழர்கள் ஒரு சிறு ஜனநாயகக் கூட்டம் கூட போடமுடியாமல் ஆக்கியுள்ள சிங்கள இனவாத அரசின் அதே செயல்பாட்டையொட்டி உள்ளது.

தமிழ்நாட்டை வடஇந்தியர்களின் குடியேற்ற மாநிலமாக மாறுவதை விரைவுபடுத்த எண்ணுகிறதோ என்கிற சந்தேகமும் எழுகிறது. வட மாநிலத்தவரின் ஓட்டு வங்கி அதிகரித்தால் அவர்கள் மூலம் தமிழ்நாட்டிலும் தேர்தல் வெற்றிகளை சாத்தியப்படுத்த முடியும்.

ஸ்டாலின் அவர்களின் விடியல் அரசின் ஒரு நூறு நாள் பொழுது விடிவதற்குள் இப்படி சுற்றி கண்காணிப்பு அரண்கள் கட்ட ஒன்றிய அரசு ரெடியாகி நிற்பது நல்ல அறிகுறி அல்ல.

—வாட்ஸப் பகிர்வு

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.