தனது திருட்டு முழியை உருட்டி பிக்பாஸ் சீஸன் 5 லும் தானே நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார் கமல். ‘இனி முழுநேர அரசியல்தான். தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்காகவே எனது எஞ்சிய வாழ்நாட்களைக் கழிப்பேன்’என்று அரசியலில் நுழையும் சமயத்தில் உதார் விட்டாலும் காசு, பணம் துட்டு மணி என்று வந்துவிட்டால் கமல் ஓடவும் மாட்டார். ஒளியவும் மாட்டார். சாஷ்டாங்கமாக தரையில் படுத்தே விடுவார்.
இனி அவரது அரசியல் சேவையை அடுத்த தேர்தல் அறிவிப்புக்கு சரியாக முப்பது நாட்களுக்கு முன்பே பார்க்க முடியும்.
கமல் அடுத்த பிக்பாஸ் சீஸன் பற்றிய அற்விப்பை வெளியிட்டதுமே இம்முறை அதில் பங்கேற்கவிருப்பவர்கள் யாராக இருக்கக்கூடும் என்ற உத்தேசப் பட்டியல் வெளியாகித்தானே ஆகவேண்டும்.
இது கொஞ்சம் அவசரப் பட்டியல்தான் என்றாலும் இப்போதைக்கு பங்கேற்க வாய்ப்புள்ளவர்கள் என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்…
நாம் தமிழர் அண்ணன் சீமான், அண்ணி விஜயலட்சுமி, சமீபகாலமாக அண்ணனின் அபரிமிதமான ஆதரவுக்கு ஆளாகியிருக்கும் பா.ஜ.க. கே.டி.ராகவன், அந்த ராகவனின் லீலைகளை திருட்டுத்தனமாக படம் பிடித்த மதன் ரவிச்சந்திரன், ராகவனை கண்மூடி சப்போர்ட் செய்து வரும் நடிகை கஸ்தூரி, மய்யத்தை விட்டு நகர்ந்து திமுகவுக்குத் தாவிய பத்ம பிரியா, இந்த உலகின் ஒரே எழுத்தாளர் ஜெயமோகன் இவர்கள் போக யூடியூபில் புழங்கிவரும் ஒன்றிரண்டு பாத்த ஸாரி மூத்த பத்திரிகையாளர்கள் சிலரும் இடம் பெறக்கூடும் என்று தெரிகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் கழுதை தேஞ்சு எதுவோ ஆன கதையாக மாறிவருவதால் இம்முறை கொஞ்சம் ஹாட்டான பார்ட்டிகளை இறக்கவேண்டும் என்று விஜய் டிவி முடிவெடுத்துள்ளதாம்.