பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களது மரணத்தில் RSS (ராஷ்டிரிய சுயம் சேவக் சங்) அமைப்புக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்தக் கோரி மகாராஷ்டிர மாநில முதல்வருக்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தினி கடிதம் எழுதியுள்ளார்.

இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்த அம்பேத்கர் ஒரே நாளில் தன் தொண்டர்கள் பல லட்சம் பேரை இந்து மதத்திலிருந்து பௌத்த மதத்திற்கு மதம் மாற்றினார். இதனால் அவரைக் கொல்லத் திட்டமிட்ட ஆர்எஸ்எஸ் அவருக்கு விஷம் வைத்துக் கொன்றதாகத் தெரிகிறது. மதமாற்ற நிகழ்வு நடந்த 52ஆவது நாளில் திடீரென உடல் நலம் குன்றி  அம்பேத்கர் மரணமடைந்தார்.

அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அம்பேத்கரின் மகனும் உறவினர்களும் அப்போதைய நேரு அரசிடம் சந்தேகம் தெரிவித்தனர். அதை விசாரிக்க சக்சேனா கமிஷனை அமைத்தார் நேரு. அந்தக் கமிஷன் அம்பேத்கார் இயற்கையாக மரணமடைந்தார் என்று கூறியது. ஆனால் அதன் முழு விசாரணை அறிக்கை இன்றுவரை வெளிவிடப்படவே இல்லை.

தற்போது மீண்டும் அம்பேத்கர் கொலையானாரா, அதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும் என்றும், சக்சேனா கமிஷன் அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரேக்கு வழக்கறிஞர் நந்தினி ஒரு திறந்த கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அக்கடிதம் கீழே..
_____

நாள்: 20.10.2021
இடம்: மதுரை

அனுப்புனர்
ஆ.நந்தினி BABL,
36, பாண்டியன் நகர்,
காந்திபுரம்,
கோ.புதூர்
மதுரை-625007

பெறுநர்
திரு.உத்தவ் தாக்கரே அவர்கள்,
மகாராஷ்ட்ர மாநில முதல்வர்,
மும்பை.

( [email protected], [email protected] ஆகிய Email முகவரிகளுக்கு அனுப்பியுள்ளோம்)

ஐயா,
வணக்கம். மராட்டிய மண்ணில் பிறந்த மகத்தான தலைவரும் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சிற்பியுமான பாபாசாகேப் Dr.அம்பேத்கர் அவர்கள் டிசம்பர் 6,1956 ல் மரணமடைந்தார். அம்பேத்கர் அவர்களது மரணம் இயற்கையானதல்ல.

மராட்டிய மாநிலம் நாக்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் RSS அமைப்பை சார்ந்தவர்கள் Dr.அம்பேத்கரை வஞ்சகமாக கொலை செய்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு அப்போது முதல் இப்போது வரை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான தனது ஆதரவாளர்களோடு சேர்ந்து Dr,அம்பேத்கர் அவர்கள் 14.10.1956 அன்று நாக்பூரில் புத்த மதத்துக்கு மாறினார். இதனால் ஹிந்துத்வா கொள்கையின் அடிப்படையில் செயல்படும் RSS அமைப்புக்கு Dr.அம்பேதகர் மீது கடும் கோபம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி RSS-ன் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் வைத்து Dr.அம்பேத்கர் புத்த மதத்துக்கு மாறும் மாபெரும் வரலாற்று நிகழ்வை நடத்தியதால் RSS அமைப்பினரின் கோபம் மேலும் அதிகரித்தது. மேலும் நாக்பூர் நிகழ்வுக்குப் பிறகு Dr.அம்பேத்கர் அவர்கள் நாடு முழுவதும் பயணம் செய்து மேலும் பல லட்சம் இந்திய மக்களை புத்த மதத்துக்கு மாற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆரிய பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருந்து இந்திய மக்கள் விடுதலை பெற வேண்டுமென்றால் தனது வழியைப் பின்பற்றி புத்த மதத்துக்கு மாறும்படி இந்திய மக்களுக்கு Dr.அம்பேத்கர் அறைகூவல் விடுத்தார். அதுமட்டுமின்றி ஆரிய பிராமணீய ஆதிக்கத்தால் இந்திய மக்கள் வரலாற்று ரீதியாக மிகப்பெரும் பின்னடைவை சந்தித்தது குறித்தும், இந்தியாவை முன்னேற்றப் பாதையில் செல்ல விடாமல் முட்டுக்கட்டையாக இருக்கும் பிராமணீய ஆதிக்கத்தை தகர்த்து இந்திய சமூகம் முன்னேறச் செய்வது எப்படி? என்பது குறித்தும் தீவிரமாக சிந்தித்து வந்தார். இது பற்றி பல ஆய்வு நூல்களை எழுதி வந்தார்.

இதனால் ஆரிய பிராமணர்களின் தலைமையில் இயங்கும் RSS அமைப்பு Dr.அம்பேத்கர் அவர்கள் மீது பெரும் ஆத்திரம் கொண்டது. இச்சூழ்நிலையில் தான் யாரும் எதிர்பாராத விதத்தில் 06.12.1956 அன்று Dr.அம்பேத்கர் திடீரென மரணமடைந்தார். அதாவது நாக்பூரில் புத்த மதத்துக்கு மாறும் நிகழ்வு நடைபெற்ற 52 வது நாளில் Dr. அம்பேத்கரின் திடீர் மரணம் நடந்தது.

RSS தான் அம்பேத்கரை கொல்ல சூழ்ச்சி செய்தது என்ற குற்றச்சாட்டு அம்பேத்கர் இறந்தது முதல் இப்போது வரை தொடர்கிறது.

முக்கியமாக அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பிராமணீய ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து வந்த பெரியார் ‘விடுதலை’ பத்திரிக்கையில் அம்பேத்கரின் மரணம் குறித்து எழுதிய கருத்து முக்கியமானது..
“அம்பேத்கரின் மறைவு என்னும் செய்தி திடீரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து அவரது மரணத்துக்குப் பின்னால் சில ரகசியங்கள் இருக்கலாம் என கருதுகிறேன். அதாவது காந்தியார் மரணத்துக்கு உண்டான காரணங்களும் அதற்கு ஆதாரமான பல சங்கதிகளும் டாக்டர் அம்பேத்கரின் மரணத்துக்கும் இருக்கக்கூடும் என்பதே ஆகும்” என்பது பெரியார் இது சம்பந்தமாக எழுதிய ஒரு முக்கியமான கருத்து.

மேலும் “கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் இந்த உலகில் நான்கு உத்தம சீலர்கள் தோன்றினார்கள். அவர்கள் புத்தர், இயேசு, முகமது நபி, டாக்டர் அம்பேத்கர்.
பாவிகள் அம்பேத்கரை கொன்றுவிட்டார்கள்.” என்றும் பெரியார் விடுதலையில் எழுதினார்.

அம்பேத்கரின் மரணத்திலிருந்த மர்மத்தை பெரியாரின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. அம்பேத்கர் கொலை செய்யப்பட்டிருக்கிறார், காந்தியின் மரணத்துக்குப் பின்னால் இருந்த சூழ்ச்சிக்காரர்கள் அம்பேத்கர் மரணத்துக்கு பின்னாலும் இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

அம்பேத்கரின் மரணத்தில் RSS-க்கு தொடர்பு உள்ளது என்பதற்கு பல சூழ்நிலை சாட்சியங்கள் உள்ளன.

“அம்பேத்கர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கிறார்” என்று அம்பேத்கரின் மகன் யஷ்வந்த் அம்பேத்கரும் அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டினர்.
இந்த குற்றச்சாட்டை பற்றி விசாரிக்க `சக்சேனா விசாரணை கமிஷன்’ அப்போதைய நேரு அரசால் அமைக்கப்பட்டது. அம்பேத்கர் கொலை செய்யப்படவில்லை, அவரது மரணம் இயற்கை மரணம் என அந்த கமிஷன் கூறியது. ஆனால் அம்பேத்கர் இறந்து 64 ஆண்டுகள் ஆன பின்பும் சக்சேனா கமிஷனின் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

2016-ல், RTI ஆர்வலர் R.H.பன்சால் அம்பேத்கரின் மரணம் தொடர்பான விவரங்கள், போஸ்ட்-மார்ட்டம் மற்றும் விசாரணை கமிஷன் தொடர்பான தகவல்களை தரும்படி இந்திய அரசிடம் கோரினார். பன்சாலின் RTI மனுவிற்கு உள்துறை அமைச்சகம் “நீங்கள் கோரியுள்ள அம்பேத்கர் மரணம் தொடர்பான எந்தத் தகவலும் ஆவணமும் அமைச்சகத்தில் இல்லை” என பதில் அளித்தது.

2017-ல் BAMCEF அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர் விலாஸ் காரட், “நேரு (Congress), கோல்வார்க்கர்(RSS), S.A.டாங்கே(CPI), சவிதாகபீர்(அம்பேத்கரின் 2வது மனைவி), Dr.மல்வாங்கர்(அம்பேத்கரின் குடும்ப மருத்துவர்) ஆகிய பிராமணர்கள் அனைவரும் சூழ்ச்சி செய்து அம்பேத்கரை கொன்று விட்டார்கள்” என ஏக் ஜனவரி ஸ்வதீந்தா சங்க்ராம்’ (January 1, Revolt of Independence) என்ற அவரது புத்தகத்தில் குற்றம் சாட்டியுள்ளனர்.

கீழ்க்கண்டவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால்..

1. அக்டோபர்-15, 1956ல் அம்பேத்கர் லட்சக்கணக்கான மக்களுடன் மதம் மாறிய பிறகு அவர் ஆற்றிய 2 மணிநேர பேருரை

2. 1956, நவம்பர் 20 நேபாளில் நடந்த 4-வது புத்த மாநாட்டில் புத்தரா? காரல் மார்க்ஸா?’ என்ற பேருரை

3. ஹிந்து மதத்தின் புதிர்கள், பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்புரட்சியும் போன்ற அவரது முடிவடையாத புத்தகங்கள்

4. இந்திய மக்களை புத்த மதத்திற்கு மாற்றுவதை தொடர்வதன் மூலம் புத்தத்தை புத்துயிர் பெற செய்வதற்கான அவரது திட்டம்.

அம்பேத்கர் பிராமணீயத்துக்கும் RSS-க்கும் சாவுமணி அடித்துவிட்டார் என்பது தெளிவாகிறது.

ஒரே நேரத்தில் அரசியல் மற்றும் புத்த மத (ஆன்மீக) தலைவராக மாறிய அம்பேத்கரின் எழுச்சி இந்தியாவில் பிராமணீயத்தின் அஸ்திவாரத்தை காலி செய்திருக்கும். மேலும் RSS-ன் வளர்ச்சியை தடுத்திருக்கும். இந்தியாவை ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு RSS-ஆல் வந்திருக்க முடியாது.

தற்போது RSS தான் இந்தியாவை ஆட்சி செய்கிறது. நாட்டில் அனைத்தையும் கட்டுப்படுத்தும் இடத்தில் RSS இருக்கிறது. ஒருவேளை அம்பேத்கர் தனது பணியை தொடர்ந்திருந்தால் RSS இந்திய மக்களால் தனிமைப் படுத்தப்பட்டிருக்கும்.

அம்பேத்கரின் சிந்தனைகளும் புத்தரின் போதனைகளும் இந்தியா முழுவதும் பரவியிருக்கும்; பிராமணீயத்தால் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து, எல்லா மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும்.

அம்பேத்கர் அவர்கள் நினைத்தது போல பணிகள் முன்னெடுக்கப் பட்டிருந்தால் கடந்த 60 ஆண்டுகளில் RSS மத அரசியல் செய்வதற்கான களமே இந்தியாவில் இருந்திருக்காது.

மனு சாஸ்திரங்களின் அடிப்படையிலான பிராமண ஆட்சியை உருவாக்குவதே RSS-ன் குறிக்கோள். அம்பேத்கரின் மரணத்துக்குப் பின்னால் RSS-ம் பிராமணிய மேலாதிக்கமும் வளர்ந்துள்ளன. பிராமணர்களால் தலைமை தாங்கப்படும் RSS தான் அம்பேத்கர் மரணத்தின் மிகப்பெரிய பயனாளி. அம்பேத்கர் மரணத்தால் பலன் அடைந்தது RSS என்பது கண்கூடாக நாம் காணும் உண்மை.

டாக்டர் அம்பேத்கர் மரணத்தில் RSS-ன் தொடர்பு இருப்பது பற்றி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தியாவின் மகத்தான மக்கள் தலைவரான டாக்டர் அம்பேத்கர் அவர்களது மரணத்தில் உள்ள அனைத்து மர்மங்களும் வெளிவந்து முழு உண்மைகளும் இந்திய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். எனவே டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மரணத்தில் RSS அமைப்புக்கு உள்ள தொடர்பு குறித்து முறையான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம்.

இப்படிக்கு,
ஆ.நந்தினி., BABL.,
மதுரை

ஆங்கிலத்தில் : https://www.facebook.com/100015114364035/posts/1253851611795306/?app=fbl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.