ஜி.வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசை மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெயில்’. சில பல மாதங்களுக்கு முன்பே படம் ரிலீஸுக்குத் தயாராகியிருந்த நிலையில் பொருளாதாரச் சிக்கல்களால் தாமதமாகிக்கொண்டே வந்தது.

படம் நல்லபடியாக வந்து ரிலீஸ் தாமதாவது குறித்து தனது முகநூல் பதிவுகளில் கசந்த மனநிலையில், தொடர்ந்து இரங்கல்பாக்கள் எழுதிக்கொண்டேயிருந்தார் இயக்குநர் வசந்தபாலன்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தை பார்க்க நேர்ந்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா,” அடடா இவ்வளவு அட்டகாசமான படம் ரிலீஸாகாமல் இருப்பதா?” என்று படத்தைத் தானே உலகமெங்கும் ரிலீஸ் செய்ய முன் வந்திருக்கிறார்.

க்ரிக்ஸ் சினி க்ரியேஷன் சார்பில் ஸ்ரீதரன்மரியதாசன் தயாரித்துள்ள.இந்தத் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கிறார். தேன் திரைப்படத்தின்மூலமாக அறிமுகமான அபர்ணதி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா சரத்குமார்,’பசங்க’ பாண்டி, நந்தன் ராம் (இசையமைப்பாளர் சிற்பி அவர்களின் புதல்வன்), ரவி மரியா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன்ஏராளமான நவீன நாடக நடிகர்களும், புதுமுகங்களும் நடித்துள்ளனர்..

படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.எடிட்டராக ரேமண்ட் டெரிக் கிரஸ்ட்டா பணியாற்றியுள்ளார். சண்டைக்காட்சிகளை அமைக்கும்பணியை தேசிய விருது பெற்ற அன்பறிவ் ஏற்றுள்ளனர். நடனக்காட்சிகளை சாண்டி,ராதிகா அமைத்துள்ளனர்.ஜிவிபிரகாஷ் குமாரின் இசையில் கபிலன்,சிநேகன் , கருணாகரன்,தெருக்குரல் அறிவு பாடல்களை எழுதியுள்ளனர்.இப்படத்திற்காக நடிகர் தனுஷ் அவர்கள் பாடிய காத்தோடு காத்தானேன் பாடல் யூடியூப்பில் வெளியாகி இரண்டுகோடி பார்வையாளர்களை ஈர்த்து பெரும் வெற்றியடைந்துள்ளது..

இந்நிலையில் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதாகஅறிவித்துள்ளார் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா. விரைவில் வெளியீட்டுத் தேதி உள்ளிட்டவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.