இயல்பாகவே நல்ல சுதி வளத்துடன் பாடத்தெரிந்தவர் நடிகர் தனுஷ். கூடவே இளையராஜாவின் தீவிர பக்தரும் கூட. அதை நன்கு அறிந்தவரான ராஜா வெற்றிமாறனின் ‘விடுதலை’படத்தில் அவரைப் பாடாய்ப்படுத்தி பாடவைத்த சம்பவத்தை விகடனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அப்பேட்டியில்,…‘`இளையராஜாவுடன் முதல்முறையா சேர்ந்திருக்கீங்க.அந்த அனுபவம் எப்படியிருக்கு?’’ என்ற கேள்விக்கு அளித்த பதிலில்,
‘`முதல்ல அவரைச் சந்திக்கும்போது ‘விசாரணை’, ‘அசுரன்’ படம் பாருங்க சார்னு சொல்லி ஸ்கிரீன் பண்ணிக் காண்பிச்சேன். ‘விசாரணை’ வெனீஸ் வெர்ஷன் போட்டுக் காட்டினேன். அந்த ரெண்டு படங்களையும் பார்த்துட்டு ‘நீ எந்த மாதிரி ஃபிலிம் மேக்கர்னு தெரியுது. வொர்க் பண்ணலாம்’னு சொன்னார். அப்புறம் ‘விடுதலை’க்கான ட்யூன்ஸ் கொடுத்தார். முதல் ஷெட்யூல் முடிச்சிட்டு வந்ததும் எடுத்த காட்சிகளைக் போட்டுக்காட்டினேன். அவர் ஒரு லவ் ட்யூன் பண்ணியிருந்ததை வேண்டாம்னு சொல்லிட்டு, நேரா போய் பியானோல ப்ளே பண்ணினார். ‘இந்த ட்யூன் வெச்சிக்கலாம். இந்தப் பாட்டை நானே எழுதுறேன்’னு சொல்லி அவ்ளோ ஆர்வமா பண்ணினார். அதை வீடியோவாவே எடுத்து வெச்சிருக்கேன்.
இதுல தனுஷ் ஒரு பாட்டு பாடியிருக்கிறார். தனுஷுக்கு ராஜா சார் சொல்லிக்கொடுத்த விதம், அவர் பாடிக்காட்டினது எல்லாமே ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது. காலைல 11 மணியிலிருந்து சாயங்காலம் 3 மணி வரைக்கும் தனுஷுக்குச் சொல்லிக்கொடுத்துப் பாட வெச்சார். கொஞ்சம்கூட டயர்டாகல. அவருடைய அந்த இன்வால்வ்மென்ட், கமிட்மென்ட், எக்ஸைட்மென்ட் பார்த்துட்டு எங்களுக்கு அவ்ளோ இன்ஸ்பிரேஷனா இருந்தது. எல்லாப் பாடல்களும் நல்லா வந்திருக்கு.’’ என்று ராஜாவை புகழ்ந்திருக்கிறார்.
ராஜாவின் தனுஷ் பாடியுள்ள அப்பாடல் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்கள் ஒன்றாக நிச்சயம் இருக்கும் என்று விடுதலை படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.