கவிஞர் பிறைசூடன் மறைந்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்கள் என சுவைபட எழுதிக் குவித்தார். பழைய தஞ்சாவூர்க்காரர். ( நன்னிலம்)
கோபுர வாசலிலே படத்தில் வரும், ‘காதல்… கவிதைகள் படித்திடும்…’ உள்ளிட்ட ஏராள பாடல்கள், இவரது கவித்திறனுக்கு சான்று.
திரைத்துறையில் 2000 பாடல்களுக்கு மேல் பாடல்களையும்
(நடந்தால் இரண்டடி,
ஆட்டமா தேரோட்டமா,
சைலன்ஸ் காதல் செய்யும் நேரமிது.. உட்பட) எழுதியவரும் பக்தி பாடல்கள் 5000க்கும் எழுதியவரும், சிறந்த ஆன்மீகவாதியும், இலக்கியவாதியுமான , கவிஞானி பிறைசூடன் (வயது 65) இன்று (8.10.2021) மாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளுடன் உள்ளனர். இவர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மகன் தயா பிறைசூடன் இசையமைப்பாளராக உள்ளார்.
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]