நல்ல நடிகை, பந்தா இல்லாமல் பழகுபவர், ஸோலோ ஹீரோயினாகவும் சரியான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் வகையில் அடுத்த நயன்தாரா என்றெல்லாம் பேசப்பட்டுவரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு ஆபத்தான கண்டத்தில் மாட்டவிருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் மாட்டவிருப்பது பால கண்டம் என்று சொல்லக்கூடிய பாலா கண்டம்.

யெஸ்..சூர்யாவின் 2டி தயாரிப்பில் பாலா இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் நாயகி நம்ம ஐஸேதான்.

‘நாச்சியார்’ படத்துக்குப் பிறகு, பாலா இயக்கத்தில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. அவருடைய இயக்கத்தில் உருவான ‘வர்மா’ படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதையொன்றைத் தயார் செய்தார் பாலா. இந்தப் படத்தைத் தயாரிக்க சூர்யாவின் 2டி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது..பாலாவின் கதையைக் கேட்ட சூர்யா, இதில் தானே தயாரித்து நடிப்பதாகக் கூறி, தேதிகள் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கிறாரா அல்லது கவுரவ வேடத்தில் நடிக்கிறாரா என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கான போட்டோ ஷூட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. வரும் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக பாலா படத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் அவரது படத்தில் நடித்து முடித்த பிறகு….நடித்து முடித்த பிறகு என்னவாகிறார்கள் என்பது ஊரறிந்த சங்கதி.

சேதுவின் அபிதா அதே படத்தோடு அபிட் ஆனார். நந்தாவின் லைலா மேலும் சில படங்களுக்குப் பிறகு மூட்டை முடிச்சுகளோடு மும்பையில் செட்டில் ஆனார். பிதாமகன் சங்கீதாவுக்கு அப்படத்தோடு சங்கூதப்பட்டது. மாயாவி பாலா இயக்காத படம் என்பதால் என்ன மாயமோ மந்திரமோ மேலும் சில படங்களுக்குத் தாக்குப் பிடித்தார். அவரையே பின்னர் நாச்சியார் படத்தில் நடிக்கவைத்து பார்ப்பவர்களைத் துடிக்க வைத்தார்.

நான் கடவுள், பரதேசி பூஜா சினிமாவை விட்டு பரதேசம் போனார். அவ்வப்போது ஆக்‌ஷன் ஹீரோயினாக வலம் வந்து அடுத்த விஜய சாந்தியாகிவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்த வரலட்சுமி இப்போது படங்களே வராத லட்சுமியாகிவிட்டார்.

பழைய கணக்குகள் இப்படி பகீரென்று இருக்க, ஐஸ்வர்யா ராஜேஷை நினைத்து கொஞ்சம் படபடப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவர் நடிக்கும் அம்மன் பட அம்மன்களாவது ஐஸை இந்த பாலா கண்டத்திலிருந்து காப்பாற்றுகிறார்களா என்று பார்ப்போம்.

 

 

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.