சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஷங்கரின் மருமகன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களில், மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித்திற்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் கிளப்புக்கு பயிற்சிக்கு வந்த 10 ஆம் வகுப்பு மாணவியிடம் தாமரைக் கண்ணன் என்ற பயிற்சியாளர் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியை கிரிக்கெட் கிளப் நிர்வாகத்தினர் சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். இதனையடுத்து சிறுமி அளித்த புகாரின் பேரில் கிரிக்கெட் கிளப் உரிமையாளர் தாமோதரன், அவரது மகன் ரோஹித், செயலாளர் வெங்கட் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி இயக்குனரின் மருமகன் பாலியல் வழக்கில் சிக்கியுள்ள சம்பவம் தற்போது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வலைதளங்களில் ஷங்கரை மக்கள் வச்சு செய்து வருகிறார்கள். அந்நியனில் சின்னச்சின்ன குற்றங்களுக்கெல்லாம் கருட புராணத்தில் பயங்கரமான தண்டனைகளை வழங்கிய ஷங்கர் தன் மருமகனுக்கு என்ன தண்டனை தரப்போகிறார்? மருமகனின் பாலியல் சீண்டலை மய்யமாக வைத்து அடுத்த படத்தை இயக்குவாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதற்கு உதராணமாக மூன்று ட்விட்டர் பதிவுகள்…

🌟ஜால்ரா காக்கா🌟
@krishnaskyblue
16 வயது பெண் குழந்தைக்கு பாலியல் சீண்டல் செய்ததாக இயக்குநர் ஷங்கர் மருமகன் மீது வழக்குப்பதிவு

~குப்பத்துல இருக்க பசங்க தான் பெண்களை பாலியல் சீண்டல் செய்வாங்கன்னு மென்டல் மாதிரி படம் எடுத்துல இப்போ உன் மருமகன பாம்பை விட்டு கொத்த வைக்க போறியா இல்ல குத்து விலக்க வச்சு குத்த போறியா?
Translate Tweet

 

நாட்டுப்புறத்தான்
@naatupurathan
Reel:

குப்பத்துப் பொறுக்கிப் பசங்க காலேஜ் படிக்கற பொண்ணுங்களை ஈவ் டீசிங் பண்ணுவாங்க – ஷங்கர், முதல்வன் படம்!

Real :

16 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இயக்குநர் ஷங்கரின் மருமகன் மீது வழக்குப்பதிவு!

Tweet
See new Tweets
Conversation
Troll Mafia
@offl_trollmafia
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து சிக்கிய இயக்குனர் ஷங்கரின் மருமகன்

“குப்பத்து பொறுக்கி பசங்க கலாட்டா பண்றாங்கனு” டயலாக் வச்சு படம் எடுத்த ஷங்கர் கிட்ட மைக்க குடுங்க

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.