சென்ற மாதம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க தடுப்பூசி கட்டாயம் என்று மிரட்டும் வகையில் போர்டு வைத்திருப்பது உண்மையா ? தற்போது என்ன நிலை ? தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம் சார்பில் No Vaccine , No Ration என்று சொல்லப்படுவது உண்மையா என்பதை அறிய கடந்த மாதம் கள ஆய்வு மேற்கொண்டார்கள். அந்தக் காணொலி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு அடிப்படை உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளில் போய் வாங்க வேறெதையும் கட்டாயம் என்று திணிக்க முடியாது. அது அடிப்படை உரிமை. அப்படி யாராவது , எந்த ரேஷன் கடையாவது உங்கள் பகுதியில் ஏதாவது பொருளை வாங்க தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினால் அது சட்டப்படி குற்றமாகும்.

அவர்கள் மேல் நீங்கள் புகார் கொடுக்க முடியும்.

மக்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசியை திணிக்கும் முயற்சி இது. அப்படி கட்டாயம் என்னும் அரசு ஏன் அரசாங்க ரீதியாக கட்டாயம் என்று அறிவிக்கவில்லை. அறிவிக்கவும் மாட்டார்கள்.

ஏனெனில் தடுப்பூசி கட்டாயம் என்று அரசு சொன்னால் தடுப்பூசி போட்டு பாதிப்படைந்தவர்களுக்கு இழப்பீடுகள் அரசு வழங்கியாக வேண்டும். தற்போது வரை அரசோ கொரனோ தடுப்பூசி நிறுவனங்களோ அப்படி எந்த உறுதிமொழியும் தரத் தயாராக இல்லை.

தடுப்பூசி போட்டு ஏதாவது பின் விளைவு உங்களுக்கு ஏற்பட்டால் அரசு எந்தவித நஷ்ட ஈடும் தர வேண்டியதில்லை. ஏனெனில் இது கட்டாயமல்ல. நீங்களாகத்தான் விரும்பிப் போய் போடுகிறீர்கள்.

எனவே தடுப்பூசி எங்கேயாவது கட்டாயப்படுத்தப்பட்டால் அதை கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு உண்டு. கட்டாயம் என்று சொல்லுமிடத்தில் தடுப்பூசி போட்டு பின்விளைவு ஏற்பட்டால் அவர்கள் இழப்பீடு தருவார்களா என்று கேளுங்கள்.

https://m.youtube.com/watch?v=UevnjPtCsvI&feature=youtu.be

வெளிநாடு செல்ல விமான பயணம் செய்ய தடுப்பூசி ஸர்ட்டிபிகேட் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் நோய்ப் பரவலை தடுத்தல் மற்றும் பாதுகாப்பு.  அது கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளப்படலாம். 

ஆனால் சில ஊர்களில் மாவட்ட கலெக்டர்களே சர்வாதிகாரப் போக்கில், பெட்ரோல் பல்க்கில் தடுப்பூசி ஸர்ட்டிபிகேட் காட்டினால் தான் என்று காட்டமாக அறிக்கை விடுவதையும் பார்க்க முடிகிறது. இதெல்லாம் சட்டப்படி செய்யலாமா ? யாராவது சட்டம் படித்தவர்கள் இது போன்ற அட்ராஸிட்டிகளை தடுக்க முயற்சி செய்தால் நன்று.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.