உலக பட்டினி வரிசைப்படுத்தல் – Global hunger index என்று ஒரு பட்டியல் வருடா வருடம்
உலகில் அதிகமான மக்கள் பட்டினியாக இருக்கும் நாடுகளை வைத்து பட்டியலிடப்படுகிறது.
வருடா வருடம் வெளியிடப்படும் அந்தப் பட்டியலில் 102 வது ரேங்க்கில் கடைசி பெஞ்சு மாணவர்களில் ஒருவனாக இந்தியா பட்டினியோடு நிற்கிறது. மிக மிக பட்டினி நிலவும் நாடாக, கடைசி ரேங்க்கான 116ஐ வாங்கிய நாடாக சோமாலியா இருக்கிறது.
இந்தியா அதிலிருந்து 14 இடங்கள் கீழே, 102 வது இடத்தைப் பெற்று தொடர்ந்து பின்னோக்கிச் செல்கிறது என நேற்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு அடுத்து 103வதாக இருக்கிறதாம்.
2014 ல் 55 வது இடத்திலும்,
2017 ல் 100 வது இடத்திற்கும்
2018 ல் 103 வது இடத்திற்கும்
2019 ல் 102 வது இடத்திற்குமாக தொடர்ந்து சரிவைச் சந்தித்துள்ளது.
இந்தியா மோசமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு கடந்துவிட்டார்கள். பட்டினியே இல்லாத நாடுகள் எது?
பட்டினி இல்லாத நாடுகள் என 18 நாடுகள் முதல் இடம் பிடித்துள்ளது.
1.பெலாரஸ்
2.போஸ்னியா
3.பிரேசில்
4.சிலி
5.சீனா
6.குரோசியா
7.கியூபா
8.எஸ்தோனியா
9.குவைத்
10.லாத்வியா
11.லிதுவேனியா
12.மான்டேனிகுரோ
13.வட மெக்டோனியா
14.ருமேனியா
15.செர்பியா
16.ஸ்லோவேனியா
17.துருக்கி
18.உருகுவே
25.ரஷ்யா
53. தாய்லாந்து
65. இலங்கை
68. பிலிப்பைன்ஸ்
71. மியான்மர்
76. பங்களாதேஷ், நேபாளம்.
90. எத்தியோப்பியா
92. பாகிஸ்தான்
102.இந்தியா
103. ஆப்கானிஸ்தான்.
116. சோமாலியா
மற்ற நாடுகளில் மக்கள் தொகை குறைவு. இந்தியா மக்கள் தொகை அதிகம் என்று நீங்கள் வாதிட வரலாம். அதற்காக பாக்கிஸ்தான், இலங்கை, நேபாளம் நாடுகளை விட சோத்துக்கு வழியில்லாதவர்கள் அதிகம் இருக்கும் நாடு என்று பெயர் பெறுவது நன்றாகவா இருக்கிறது ? வெட்கக்கேடாக இல்லையா?
மோடியும், அமித்ஷாவும், நிர்மலா சீதாரமனும் இன்ன பிற பாஜக அமைச்சர்களும் இந்தியா வல்லரசாகி விட்டது. பாலாறும் தேனாறும் தற்போது ஒடிக் கொண்டிருக்கிறது என்கிற ரேஞ்ச்சில் புளுகிக் கொண்டே இருக்கிறார்கள்.
1947 ல் இந்தியா விடுதலை பெற்றது.
1949 ல் சீனா விடுதலை பெற்றது.
இந்திய மக்கள் தொகை 135 கோடி
சீனா மக்கள் தொகை 139 கோடி
ஆனால் சீனா 5 வது இடம்
இந்தியா 102 வது இடம். ஏன்?
காரணம் ஒன்று தான். சமூகத்தின் சொத்துகளும், உற்பத்தியும், விநியோகமும் அரசின் கட்டுப்பாட்டில் சீனாவில் இருக்கிறது.
உலகமயக் கொள்கையையும் தனது நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அமுலாக்குகிறது.
இந்திய அரசை அம்பானி, அதானி, டாடா, பிர்லா போன்ற கார்ப்பரேட்கள் தான் வழி நடத்துகிறார்கள்.
சமூகத்தின் சொத்துகள் தனியார் பெருமுதலாளிகளின் கைகளில் சிக்கி கிடக்கிறது.
உலகமயக் கொள்கையினால் உலகநாடுகளின் வேட்டைக்காடாக இந்தியா மாறி இருக்கிறது.
எனவே இங்கு பட்டினி தாண்டவமாடுகிறது. மேலும் மேலும் மக்கள் வறுமையை நோக்கித் தள்ளப்படுவார்கள்.
https://www.globalhungerindex.org/ranking.html