கடந்த ஐந்தாறு வருடங்களாகவே மிக சுமாரான படங்களையே கொடுத்துவரும் ரஜினி ‘அண்ணாத்த’படம் மூலம் இன்னும் அதிகமான சீண்டலுக்கு ஆளாகிவிட்டார். தியேட்டரை விட்டு வெளியே ரஜினி ரசிகர்கள்,வெறியர்கள் மிகுந்த ஆத்திரத்துடன் ‘அந்த சிவாவைக் கண்ணுல காட்டுங்கப்பா. அவரை ஏதாவது செய்யணும்போல இருக்கு’என்று அளித்த பேட்டிகளே அதற்கு ரத்த சாட்சி.
உண்மை நிலவரம் இப்படி இருக்க, ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில்,…””அண்ணாத்த ப்ளாக் ஃபஸ்டர் ஹிட் என்பதால் அடிக்கடி ரஜினி சாரிடம் பேசுகிறேன். ஒவ்வொரு முறையும் ரஜினி சாரிடம் போனில் பேசும்போது சந்தோஷத்துடன் ”சிவா சார்… படம் பெரிய சக்சஸ்ங்கிறாங்க சிவா சார்…. நாம ஜெயிச்சிட்டோம் சிவா சார்” என்பார். அவர், அப்படி பேசுவதை கேட்பதற்கே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்” என்று உற்சாகமுடன் உல்டா அடித்துள்ளார் சிவா.
அப்பேட்டியைப் பார்த்ததும் படு டென்சனான ரஜினி, ஏற்கனவே ரசிகர்கள் சிவா மேல பயங்கர அப்செட்டுல இருக்காங்க. இப்ப தேவையில்லாம ஏன் கதை கட்டுறார்” என்று ஆதங்கப்பட்டாராம்.
ரஜினி நிலவரம் இப்படி இருக்க,”சார் படம் பாத்தீங்களா, எப்படி இருக்கு?” என்று ஒரே ஒரு நிமிடம் பேசுவதற்காக சூர்யாவுக்கு போன் அடித்தால் கடந்த ஒரு வாரமாக அவரோ அட்லீஸ்ட் அவரது உதவியாளர்களோ கூட அண்ணாத்தவின் போனை அட்டெண்ட் பண்ணுவதில்லையாம். ஒரு காலத்தில் சிவா காம்பினேஷனில் சூர்யா படம் பண்ணுவதாக இருந்தது அனைவரும் அறிந்த செய்தி. இனி இந்த ஜென்மத்தில் அது நடக்காது என்பது தெரிந்த செய்தி.