64 முடிந்து தனது 65ம் வயதில் காலடி எடுத்து வைக்கும் இயக்க்நர் பார்த்திபன் முகநூல் ,ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் தனது குசும்பான பதிவுகளைப் போட்டுக்கொண்டே இருப்பவர் என்பது நாடறிந்த சங்கதி.
கீழே காணக்கிடக்கும் ‘குடிப்பழக்கம்’குறித்த இந்தப் பதிவு அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரே சொந்தமாக எழுதியது…
…Parthiban Radhakrishnan
ஒரு உளவாழ்த்து போதும்,
ஒரு வருடம் ஆயுளில் கூட…
பல்லாயிரம் கோடி ஆண்டுகள் இப்போதே வாழ்ந்துவிட்ட நிறைவெனக்கு உங்கள் வாழ்த்துகளால்!
பூஞ்சிறகுத் தாங்குமா 15.11 ரிக்டர் அளவிலான பூகம்ப அன்பை?
மூங்கில் குழல் வழி வரும் வெறுங்காற்று இசையாதல் போலே….உங்கள்
குரல் வழி பிறக்குமிந்த ‘பார்த்திபன்’ !
பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை நான்.
என் கொண்டாட்டமெல்லாம் உங்கள் கைதட்டல்தான்.அதுதான்
கலைஞனுக்குத் தாய்பால்.
நிறுத்தாமல் குடித்துக் கொண்டேயிருப்பதால்
வயது கூடாமல் இளமை கூடுகிறது எனக்கு. புதிதாய் படைக்கத் தெம்பும் கூடுகிறது.அதில்
‘இரவின் நிழல்’ -உங்கள் பார்வைக்கு படைக்க
உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
படைப்பு என்பது உயில் அல்ல எழுதி
அலமாரியில் வைத்துக்கொள்ள.
பார்வைக்கு வெளியிடுவதே
பாராட்டுக்குத் தானே? —— நன்றி!