சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் 2020ம் ஆண்டு நவம்பரில் ஒரு கள்ளப்பிரேமப் பிரச்சனை டீல் செய்யப்படுகிறது. புருசனை விட்டு ஓடிவந்த அன்னபூரணி எனும் பெண், மனைவியை விட்டு ஓடி வந்த அரசு என்னும் ஆண் இருவரும் டைவர்ஸ் கேட்டு ஜீ தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மைக்கு வருகிறார்கள்.

நிகழ்ச்சியின் நீதிபதியான லஷ்மி ராமகிருஷ்ணன் எவ்வளவோ முயன்றும், கள்ளப்பிரேம இணையரைப் பிரிக்க முடியவில்லை. மனைவியின் கெஞ்சல், குழந்தைகளின் கண்ணீர், சக்காளத்தனின் அடி உதை எதுவுமே அந்த ஆதர்ச தம்பதிகளை அசைக்க முடியவில்லை.

இப்படி குடும்பத்தை விட்டுவிட்டு காஜியெழும்பித் திரிகிறார்களே இந்த உதவாக்கரைகள் நாசமாப் போவார்கள் என்றுதான்
நிகழ்ச்சியைப் பார்த்த யாருமே நினைத்திருக்க முடியும்.

ஆனால் ஒரு வருடம் கழித்து இன்று நடந்திருப்பது என்ன தெரியுமா? அந்தப் பெண் பராசக்தியின் அவதாரமாக எழுந்தருளியிருக்கிறார். ஆம் உலகமக்களைக் காத்தருள ஆதிபராசக்தியாக வந்துவிட்டார்.

அன்றைக்கு கள்ளக்காதல் என்று சொல்லி இவர்களைப் பிரித்து வைத்திருந்தால் அது எப்பேர்ப்பட்ட வரலாற்றுப் பிழையாக முடிந்திருக்கும்? ஆகவே உங்கள் ஒழுக்க அளவீடுகளை வைத்து எவரொருவரையும் ஜட்ஜ் செய்யாதீர்கள். காரண காரியமின்றி இங்கு எதுவுமே நடப்பதில்லை காஷ்மோராக்களே.
Annapurani Arasu Amma 🔥🔥🔥

முகநூலில்….Rajan Radhamanalan

 

https://www.zee5.com/search

 

https://www.zee5.com/tv-shows/details/solvathellam-unmai/0-6-80/solvathellam-unmai/0-1-manual_21f3m8e2ukbg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.