நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் விஜய் மகேந்திரன் மற்றும் கவிஞர் நரன் என்னுடைய ராஜீவ்காந்தி சாலை நாவலை இயக்குநர் வசந்தபாலன் கேட்டதாக சொன்னார்கள்.
அவர்களிடம் கொடுத்தனுப்பினேன். பிறகு அவர் படித்தாரா இல்லையா என்று தெரியவில்லை.
புதுப்பேட்டையிலிருந்து கண்ணகிநகருக்கு இடம்பெயர்ந்து காவல்துறையினரால் பொய்வழக்கு போடப்பட்டு ஜெயிலுக்கு போய்வந்த லூர்து, சூசை , பழனி என்ற மூவரை பற்றிய கதை அந்த நாவல். ஐடி நிறுவன பின்னணியில் அதை எழுதினேன். ஒருத்தன் கேப் டிரைவர். இன்னொருத்தன் ஐடியில் வேலைபார்க்கும் கைகுழந்தையோடு தனியாக இருக்கும் செளம்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வான். லூர்து தண்ணிகேன் போடுபவன். இவர்கள் மூவரது வாழ்க்கையும் கண்ணகிநகரில் எப்படி போகிறது என்பதுதான் நாவல்.
அது நல்ல வரவேற்பு பெற்ற நாவல். சுவாரஸ்யமான நாவலும்கூட. இன்று ஜெயில் படம் பார்த்துவிட்டு வந்த பலர் தலையில் அடித்துக்கொள்கிறார்கள். கண்ணகிநகரை இருபதாண்டுகளுக்கு மேல பார்த்துவருகிறேன். அதன் ஒவ்வொரு அங்குலமும் தெரியும். என்னிடம் கேட்டிருந்தால் படத்தை கொஞ்சம் சுவராஸ்யமாக எழுதி கொடுத்திருப்பேன்.
–முகநூலில் விநாயக முருகன்.
சினிமாக்காரர்களின் பிரதானக் குணம் நம்பிக்கை துரோகம். அதன் இறுதிப் பரிசு வீழ்ச்சி !
https://www.facebook.com/100000769078139/posts/4555419087827015/?app=fbl