மோகன்லால் நடித்த மற்றும் தேசிய விருது வென்ற மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் – அரபிக்கடலின் சிங்கம்) திரைப்படம் இந்தியாவில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளதாக Prime Video அறிவித்துள்ளது.

விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுப் பெற்ற இப்படத்தை இந்தியாவில் உள்ள Prime மெம்பர்கள, டிசம்பர் 17 முதல் , மலையாளம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் Prime Video-வில் காணலாம்.

ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் வெளிவந்துள்ள மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் – அரபிக்கடலின் சிங்கம்) திரைப்படத்துடன் தென்னகத்தின் பிரபல நட்சத்திரம் மோகன்லால் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோரின் மிகவும் வெற்றிகரமான நடிகர்-இயக்குனர் கூட்டணி உங்கள் திரைக்கு வருகிறது.

சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத்தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்குமுன்கூட்டிய அணுகல், வரம்பற்ற வாசிப்புக்கு PRIME Reading மற்றும் மொபைல் கேமிங் உள்ளடக்கம் கொண்ட PRIME Gaming இவை அனைத்தும் Prime உறுப்பினர் சந்தாவில் கிடைக்கிறது. Prime Video மொபைல் பதிப்பிற்குச் சந்தா செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் – அரபிக்கடலின் சிங்கம்) திரைப்படத்தை கண்டு ரசிக்க முடியும்.

Prime Video மொபைல் பதிப்பு Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றைப் பயனர், மொபைல் மட்டுமே திட்டமாகும்.

பிரபல நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்துள்ள இந்த ஆண்டின் மிகப்பெரிய காவிய சாகசமான மரக்கார்: லயன் ஆப் அரபியன் சீ ( மரைக்காயர் – அரபிக்கடலின் சிங்கம்) திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் பிரீமியரை இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றான Prime Video உங்கள் திரைக்கு எடுத்து வருகிறது.

ஆசீர்வாத் சினிமாஸ்ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் பிரியதர்ஷன் எழுதி இயக்கி, அர்ஜுன் சர்ஜா, சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், மறைந்த நெடுமுடி வேணு மற்றும் பிரணவ் மோகன்லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்பிரம்மாண்டமான மலையாள மொழித் திரைப்படம் இம்மாத தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம், இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் தேதி முதல் Prime Video-இல் திரையிடப்படும், மேலும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் காணக் கிடைக்கும்.

மலையாளத் திரையுலகில் இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே அதிகம் செலவு செய்யப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது, இது அக்டோபர் 2021 இல் 67வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிறந்த காஸ்ட்யூம்க்கான விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
“திரைப்படத்தைக் கண்டு ரசித்த பார்வையாளர்களின் கருத்துகளை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், மேலும் எனது ஒவ்வொரு ரசிகர்களும் அளித்த அன்புக்கும் எனது நன்றிகள். இந்தியாவின் முதல் கடற்படைத் தளபதி என்று அழைக்கப்படும் குஞ்சாலி மரக்கரின் பிரபலக் கதையை உயிர்ப்பிக்கும் இப்படத்தின் நான் ஒரு பகுதியாக இருப்பது பெருமைக்குரியது, ”என்று பிரபல நடிகர் மோகன்லால் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் “இது ஒவ்வொரு இந்தியனின் இதயங்களையும் உணர்ச்சிகளையும் தொடும் கதை என்று நான் நம்புகிறேன். இக்கதையை அசாதாரணமான அளவில் உயிர்ப்பிக்க முடிந்தது ஏன் கனவு நனவானதை உறுதி செய்தது. Prime Video-இல் மரக்கார் டிஜிட்டல் பிரீமியராகக் காட்சிப்படுத்தப்படுவதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து இத்திரைப்படத்தைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பை வழங்கும்.” என்றார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.