ராகுல், செல்வா அனிதா, பகவதி பாலா, போன்ற சுமார் 90 சதவிகித புதுமுகங்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், நளினி, மீரா கிருஷ்ணன், வையாபுரி, கிங்காங், போண்டாமணி, கொட்டாச்சி, கராத்தே ராஜா,பரோட்டா முருகேஷ், பெஞ்சமின், தாரை மணியன், ஆகியோர் நடித்துள்ள படம் ‘ஆள் இல்லாத ஊர்ல அண்னன் தான் எம்.எல்.ஏ.
ஆர்.சுந்தர்ராஜன் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வயது மூப்பு காரணமாக ஓய்வெடுக்க, அவரது தம்பி வையாபுரி தேர்தலில் நிற்கிறார். ஆனால் எதிர் அணியினர் அவரது மனுவை செல்லாததாக்கி, அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். ஸோ வில்லன் ஸோலோவாக தேர்தலில் ஜெயித்து அட்ராசிட்டிகளில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் அட்ராசிட்டியின் உச்சமாக அனாதைகள் ஆசிரமம் நடத்திவரும் நளினியின் இடத்தை தீவைத்துக்கொளுத்தி அந்த இடத்தை ஆக்கிரமிக்க, நளினியின் மாணவர்களில் ஒருவர் அந்த எம்.எல்.ஏ.வைக்கொல்லுகிறார்.
நடுநடுவே ஹீரோ ஹீரோயின் காதல் காட்சிகளும் படத்தில் உண்டு. நீண்ட காலத்திற்குப்பின் படத்துக்கு இசையமைத்திருப்பவர் தேனிசத் தென்றல் தேவா.
சண்டை பயிற்சி : விஜய் ஜாகுவார்.
எடிட்டிங் ; ராம்நாத்
நடனம் ; ரமேஷ் ரெட்டி
. தயாரிப்பு நிர்வாகம் : என்.ஏ.நாதன்
மக்கள் தொடர்பு ; விஜயமுரளி – கிளாமர் சத்யா
. பாடல்கள் ; ஏகம்பவாணன், வாழப்பாடி வெங்கடேஷ், ஜீவன் மயில், மலேசியா சாருமதி
கதை- திரைக்கதை – வசனம் – ஒளிப்பதிவு – இயக்கம்
பகவதி பாலா.