இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தனக்கும் தனது மனைவிக்கும் இடையே விவாகரத்து நடந்துவிட்டதாகவும் இச்செய்தியை சரியான முரையில் புரிந்துகொண்டு தங்களது அந்தரங்க வாழ்க்கைக்கு மதிப்பு கொடுக்கும்படியும் இசையமைப்பாளர் டி.இமான் மஞ்சள் வண்னத்தில் ஒரு அழகிய டிசைன் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
தீவிர கிறிஸ்தவரான இமான் 2008ம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை மணந்தார். இவர்களுக்கு வெரோனிகா,ப்ளஸிகா என்ற இரு மகள்கள் உள்ளனர். திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் குடும்ப நண்பர்கள் ஏற்பாடு செய்த அனைத்து சமாதான முயற்சிகளும் தோல்வியில் முடியவே 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் கோர்ட் மூலம் முறைப்படி விவாகரத்து பெற்றுள்ளனர். ஆனால் அதை என்ன காரணத்தாலோ அதை இரு தரப்பினரும் மறைத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் டி.இமான் இன்னொரு திருமணத்துக்கு தயாராகி வருவதாகத் தெரிகிறது. இனியும் விவாகரத்து விவகாரத்தை மறைக்க முடியாது என்பதால் நேற்றைய தினம் ஒரு அட்டகாசமான டிசனை வடிவமைத்து ’வாழ்க்கை எங்களை வெவ்வேறு திசைகளில் பயணிக்க பணித்துள்ளதால் நானும் மோனிகா ரிச்சர்டும் விவாகரத்து செய்துகொண்டோம். எங்கள் அந்தரங்க வாழ்க்கைக்கு மதிப்பு கொடுத்து ஆதரவளியுங்கள்’என்று பகிர்ந்துள்ளார்.
இமானின் மகள்கள் இருவரும் அம்மாவின் அரவனைப்பில் இருக்கிறார்கள் போல் தெரிகிறது. ஆக ‘விஸ்வாசம்’படத்துக்காக இவர் போட்ட ‘கண்ணான கண்ணே கண்னான கண்ணே என் மீது கோபமா?’ பாட்டு சொந்த மகள்களை நினைத்து போட்டிருக்கிறார் போல…