2003ம் ஆண்டு ‘பார்த்திபன் கனவு’ என்கிற வித்தியாசமான படத்தின் மூலம் இயக்குநராகக் காலடி எடுத்து வைத்த கரு.பழனியப்பன் 9 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கியிருக்கிறார். கடவுள் நம்பிக்கையில்லாத அவர் இப்படத்துக்கு ‘ஆண்டவர்’ என்று தலைப்பு வைத்துள்ளார்.

பார்த்திபன் கனவுக்குப் பின்னர் கரு.பழனியப்பனின் இயக்கத்தில் ’சிவப்பதிகாரம்’, ‘பிரிவோம் சந்திப்போம்’,’மந்திரப்புன்னகை’,’சதுரங்கம்’,’ஜன்னல் ஓரம்’ ஆகிய படங்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் வந்தன. அவர் இயக்கிய படங்களில் ஆகச் சிரப்பான படமான ‘சதுரங்கம்’ தயாரிப்பாளரின் நிதிப்பிரச்சனை மற்றும் அப்பட ஹீரோ ஸ்ரீகாந்தின் ஒத்துழைப்பின்மையில் சில வருடங்கள் தாமதாக வந்து சோபிக்காமல் போனது. மந்திரப்புன்னகையில் ஹீரோவாக நடித்ததை அடுத்து புதுமுக இயக்குநர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் ‘கள்ளன்’படத்தில் நாயகனாக நடித்தார். அப்படம் இன்னும் ஓரிரு வாரங்களில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் சரியாக 9 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்போதைக்கு படத்தின் முக்கிய டெக்னீஷியன்களான யுவன் ஷங்கர் ராஜா, வேல்ராஜ், கே.எல்.பிரவீன், ராஜீவன் ஆகியோர் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. நாயகன்,நாயகி மற்ற நடிகர்கள் டெக்னீஷியன்கள் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அப்படத்தைத் தயாரிக்கும் லிப்ரா புரடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் சுமார் அரைடஜன் படங்களை இவர் தயாரித்திருந்தாலும் ‘அடடே ஒரு வழியா தன்னோட முதல் ‘படத்தை’ ஆரம்பிச்சிட்டுருய்யா…வாழ்த்துக்கள்’ என்று அவரது முகநூல் பக்கத்தில் மக்கள் வாழ்த்தி வருகிறார்கள்.

டைட்டிலுக்கு ஆண்டவர் கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டீங்களா மிஸ்டர் பழனியப்பன்?

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.