எனது வீர ஹிஜாபி சகோதரிகளுக்கு அர்ப்பணம்!!!!

உஸ்மானிய்யா பேரரசு வீழ்ந்த பிறகு பிரெஞ்சு படை துருக்கியின் மர்அஷ் என்ற நகரத்திற்குள் நுழைந்து.அந்த நகரத்தில் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்திருந்தனர்.

இதனை கண்ட பிரெஞ்ச் படையின் தலைமை அதிகாரி ‌அந்த பெண்களிடம் “இஸ்லாமிய ஆட்சி நிறைவடைந்து விட்டது.இப்போது நீங்கள் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் உள்ளீர்கள்.எனவே உங்களது ஹிஜாபை கழற்றுங்கள்” என்று கூறினார்.ஹிஜாபை கழற்ற அந்த பெண்கள் மறுத்தனர்.

இதனால் அந்த பிரெஞ்சு கயவன்
ஹிஜாபை பிடித்து கழற்ற முயற்சி செய்தான்.அதிகாரிக்கு அருகிலிருந்து இதனை கண்ட சூதுஜு என்ற பால்வியாபாரி,.தன் கண் முன்னே முஸ்லிம் பெண்மணியின் மானம் பறிபோவதை பொறுக்க இயலாமல் அந்த அதிகாரியின் துப்பாக்கியை சட்டென்று உருவி அவனை கொன்று விட்டார்.

இந்த நிகழ்வின் விளைவாக பிரஞ்ச படையை எதிர்த்து மிகப்பெரிய புரட்சியை மர்கஷ் நகரத்து மக்கள் மேற்கொண்டனர்.இதனால் இந்த நகரத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் பிரஞ்சு படைக்கு ஏற்பட்டது.மர்அஷ் மீண்டும் சுதந்திரமான நகரமாக உருமாறியது.

இதன் நினைவாக இந்த நகரத்தில் அந்த அதிகாரி ஹிஜாபை இழுப்பது போலவும் அந்த பால் வியாபாரி அந்த அதிகாரியை சுடுவது போலவும் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த பால்வியாபாரியின் நினைவாக சூதுஜு என்ற பெயரில் ஒரு பல்கலைக்கழகமும் இயங்கி வருகிறது.இன்னும் பல்வேறு சமூக சேவை அமைப்புகளுக்கு இந்த நபரது பெயரையே வைத்துள்ளனர்.

المصدر:
تاريخ الدولة العثمانية

தமிழில்: மௌலவி நியாசுதீன் புகாரி நத்வி

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.