உன் மாநிலத்துல அதிகமா வரி வருவாய் இருக்கா. இந்தா GST. இனி உன் மாநில வருவாய் எனக்குதான்.
உன் மாநிலத்துல ரேஷன் நல்லா இருக்கா, இந்தா ஒருநாடு ஒருரேசன். இனி என் மாநில மக்கள் உன் ஊர்லயே நிரந்தரமா தங்குறதுல பிரச்சனை இருக்காது.
உன் மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகள் நிறைய இருக்கா இந்தா நீட், இனி உன் மருத்துவ கல்லூரி இடங்கள் எங்கள் மாநில மாணவர்களுக்குத்தான்..
உன் மாநிலத்தில் நல்ல கல்வி திட்டம் இருக்கா? இந்தா புதிய கல்விக் கொள்கை இனி உன் மாணவர்களுக்கும் அதே வேத கல்வி, அதே இராமாயணப் புராண குப்பைகள்தான்..
உன் மாநிலத்தில் பெரிய அணை இருக்கா இந்த புதிய அணை பாதுகாப்பு சட்டம், இனிமே நான் நினைக்கும் போதுதான் தண்ணிய தொறந்து விடுவேன்..
உன் மாநிலத்தில் நல்ல சாலை வசதி இருக்கா, எல்லாத்தையும் தேசிய நெடுஞ்சாலை ஆக்கு, அங்கங்க டோல் போட்டு நான் வருமானம் பார்த்துப்பேன்..
உன் மாநிலத்தில் நிலக்கரி இருக்கா, இந்த புதிய மின்சார சட்டம், இனிமே நெய்வேலி எனக்குத்தான், அதிலிருந்து கிடைக்கும் மின்சாரமும் எனக்குத்தான்..
உன் மாநிலத்தில் காவிரி டெல்டா இருக்கா, இந்தா புதிய எரிசக்தி திட்டம்.. இனி காவிரி நெல் பூமி இல்ல அதானி அம்பானியின் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் பிளாண்ட்..
உன் மாநிலத்தில் வனங்கள் இருக்கா, இந்த வனப் பாதுகாப்புச் சட்டம் அங்கிருக்கும் பழங்குடிகளை எல்லாம் வெளியேற்று..
உன் மாநிலத்தில் நல்ல வேலை வாய்ப்பு இருக்கா, உன் மாநிலத் தேர்வாணையத்தில் எங்கள் மாணவர்களையும் எழுத விடு, எப்படி மார்க் எடுக்கிறோம்னு மட்டும் பாரு..
உன் மாநிலத்தில் பத்திரப்பதிவுல அதிக வருமானம் வருதா? இந்தா ஒரு நாடு ஒரு பத்திரம். இனி உன் மாநில பத்திர வருவாய் முழுக்க ஆட்டைய போட்ருவேன். லீகலா நில ஆக்கிரமிப்புல எங்கூரு பனியாக்களும் சேட்டுகளும் உங்கூர் முதலாளிகளுக்கு சமமா இனி கொள்ளையடிப்பாங்க.
மொத்தமா அமுக்குறானுக.
அருண் கோமதி