இறந்தவர்களை புதைப்பதே தமிழர் மரபாக இருந்திருக்கிறது.
புதைப்பதால் மண்ணில் புழு பூச்சிகளுக்கு உடல் உணவாகிறது. மண் உரப்படுகிறது. மேலும், மேலும் மண்ணில் நைட்ரஜன் சுழற்சியும் சீராக நடைபெறுகிறது. இறந்த பிறகு புதைக்கப்படடால், சுற்றுசூழலுக்கு மாபெரு நன்மையை நம் உடல் செய்யும். இதுதான் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முட்பட்ட தமிழரின் ஆதி வழக்கம்.
அறிவற்ற ஆரியர்கள் இந்தியாவிற்குள் வருகிறார்கள். இந்தியாவெங்கும் இருந்த திராவிடர்களை பல வழிகளிலும் ஆதிக்கம் செய்கிறார்கள். தமிழரின் புதைக்கும் பழக்கத்தை மடைமாற்றி எரிக்கும் பழக்கத்தை திணிக்கிறார்கள். எரியூட்டப்படும் உடல்களுக்கே வேதம் ஓத வருகிறார்கள்.
வேறு வழியின்றி அதுவரை புதைத்து, நடுகல் எல்லாம் நட்டு வந்த தமிழர்கள் எரிக்க ஆரம்பிக்கிறார்கள். உடல் எரிகிறது. கார்பன்டை ஆக்ஸைடு வெளியீடு அதிகமாகி கார்பன்டை ஆக்ஸைடு புவியில் அதிகம் நிலைநிறுத்தப்பட்டு புவி வெப்பமாகிறது. எரிக்கும்போது வெளிப்படும் புகையால் ஆக்சிஜன் மாசுபடுபட்டு நுரையீரலை பாதிக்கிறது.
அது எல்லாம் கூட பரவாயில்லை. எரிந்த மிஞ்சிய எலும்புத்துண்டுகள் ஆற்றங்கரையில் விடப்பட்டு, அதோடு அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் எல்லாம் விடப்பட்டு அதனால் ஆற்றின் ஒட்டம் தடைபட்டு ஆறுகளும் பெரும் மாசடைகின்றன. ஆற்றில் இறங்கினால் எலும்பு, மண்டை ஓடு, சாம்பல் வரும் என்பதைத் தாண்டி கங்கை போன்ற நதிகளில் இறந்த உடல்களே முழுமையாக மிதந்து வரும். கங்கை நாசமாய் போனதற்கு இன்றும் நிலவி வரும் இத்தகைய மூடநம்பிக்கைச் சடங்குகள் காரணம்.
எரிப்பது நீர், நிலம், காற்று என அனைத்தையும் மாசுபடுத்தும்.
புதைப்பது நீர், நிலம், காற்று என அனைத்தையும் வளப்படுத்தும்.
நம் முன்னோர்களை புதைப்பதால். வரும் தலைமுறைகள் கண்ணால் பார்த்து இதுதான் என் முன்னோர்கள் என்று வணங்குவார்கள். ஒரு இட அடையாளம் உருவாகிறது. இம்மண் நம் மண் என்கிற ஆழ்ந்த பற்று வரும் தலைமுறையினருக்கும் ஏற்பட தூண்டுதலாகிறது.
அதே நேரம் முன்னோரை எரிப்பதால் உடல் அடையாளமற்றுப் போய்விடுவதால், வரும் தலைமுறைகளுக்கு எதை காட்டி இதுதான் உங்கள் முன்னோர்கள் என்று கூறுவீர்கள் ? அதான் எரித்து அடையாளத்தை மறைத்துவிட்டீர்களே !!
இறப்பிலும் தமிழனாக மாறுங்கள்.