லதா மங்கேஷ்கர், தன் 70 வருட இசைக் குரலை நிறுத்திக் கொண்டார் நேற்று. பின்னணிப் பாடகியாக ஒரு சகாப்தம் படைத்த அவருடைய மறைவு கலையுலகிற்கு ஒரு இழப்பாகும். இசையுலகில் தன் குரல் தடத்தை பதித்த அந்த குயிலை நாம் நினைவு கூர்ந்து வழியனுப்புவோம்.
அத்தோடு வேறு சில விஷயங்களும் நாம் நினைவுகூர வேண்டும்.
லதா மங்கேஷ்கர்… குரல் இனிமை தான் … ஆனால்…
லதா மங்கேஷ்கரின் பிரிவு பாஜகவுக்கு பெரும் இழப்பாகும்!
நவம்பர் 2013 இல், குஜராத் இனப்படுகொலையின் இரத்தக் கறை படிந்த மோடியை பகிரங்கமாக ஆதரித்தார் லதா. மோடியை வருங்கால இந்தியாவின் பிரதமராகப் பார்க்க விரும்புவதாக அறிவித்தார்.
ஜனவரி 2014 இல், பிரதமர் வேட்பாளர் மோடியுடன் பாஜக ஏற்பாடு செய்த ஒரு மேடையில் அவரும் கலந்து கொண்டார். தனது ஜனரஞ்சக ஆதரவை தெரிவித்தார்.
தொடர்ந்து வந்த ஆண்டுகளில் மோடியையும், பாஜகவையும் பல்வேறு கட்டங்களில் ஆதரித்தே வந்தார்.
2017ஆம் ஆண்டு பாஜகவின் தேர்தல் சாதனைகளைப் பாராட்டி ட்வீட் செய்தார்.
2018ல் மகாராஷ்டிரா தேர்தலுக்கு சற்று முன்பு அமித் ஷாவை சந்தித்தார்.
2021ல் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த சமூக ஆர்வலர்களுக்கு எதிராகவும் மோடிக்கு ஆதரவாகவும் ட்வீட் செய்தார்.
சுருக்கமாகச் சொன்னால், இதுதான் லதா மங்கேஷ்கர். தனது கலையுலக புகழ் வெளிச்சத்தை, வெகுஜன மக்கள் அபிமானத்தை, ஒரு பாசிச குணம் கொண்ட அழிவு சக்திக்கு ஆதரவு தருவதை நோக்கியே செலவழித்தார். அவ்வகையில், அரசியல் அறியாத சாதாரண மக்களை ஒரு அழிவு சக்தியை நோக்கி ஆதரவுக் கரம் நீட்ட வைப்பதில் அவருக்கும் பங்கு இருந்திருக்கிறது.
அவர் மரணித்த வேளையில் இதை நாம் கூறலாமா? என்று நீங்கள் கேட்டால், அவரது இசைப்பணியை, சாதனையைப் பாராட்டும் அதே வேளையில், அவரது பாஜக சேவையை நினைவுகூர இதைவிட சிறந்த நேரம் இல்லை என்பதே எமது எளிமையான பதிலாகும்.
ஒருவர் பிரபலம் என்பதால் அவரது தவறுகளுக்கும் அவரது அனைத்து பார்வைகளுக்கும் ஒத்துப்போதல் என்பது சமூக சீர்கேடாகும் ….
–வாட்சப் பகிர்வு.