சித்ரா ராமகிருஷ்ணன் என்ற பெண்மணி கைது.

எதற்காக….?

பல வருடங்களாக இந்திய பங்கு சந்தையின் தலைவராக இருந்த அவர் 
சுமார் 3 1/2 லட்சம் கோடி ஊழல் செய்து இருக்கிறார் என்பதால்

இன்னைக்கு பெண்கள் தினமாம், இருந்துட்டு போகட்டும்..

சித்ரா ராமகிருஷ்ணன்னு ஒரு பெண் பங்குச்சந்தை ஊழலில் கைதுன்னு செய்தி வருது ஆனா போட்டோ வரமாட்டேங்குது. ஒரு பத்திரிக்கைல கூட போட்டோ வரமாட்டேங்குது ஏன்னு தெரில,
எந்த பத்திரிக்கையும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து முதன்மை செய்தியாக வெளியிட வில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.
ஆனா கனிமொழி, ஜெயலலிதா, சசிகலா என தென்னக பெண்கள் கைது செய்யப்பட்டபோது பிசி ஸ்ரீராம் ரேஞ்சுக்கு விதவிதமாக போட்டோ எடுத்து குமிச்சிருக்காங்க..

என்ன மாயம்னே தெரில சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட மாதிரி ஒரு புகைப்படம் கூட வரல.. ஹீரோயின் மாதிரி டாம்பீகமான அந்த நான்கு புகைப்படங்கள்தான் திரும்ப திரும்ப காட்டுகிறார்கள். எங்க இருந்து வர்ற இன்ஸ்டிரக்ஷன் இது…?

சசிகலாவை திருட்டு பொறுக்கி என்று சொன்ன பத்ரி சேஷாத்ரி சித்ரா ராமகிருஷ்ணன் ஊழல் குறித்து ஒரு வார்த்தை பேசல,

ஊழல் ஊழல்னு குதிக்கிற ஒரு பா#### பேசல… மாலன், சுமந்த் ராமன், நாராயணன், கே டி ராகவன், அமெரிக்கை நாராயணன், சேசாத்திரி, பக்ஷி ராஜன் என ஊடக துறையில் கோலோச்சிய ஒருத்தன் கூட பேசல,
திருட்டு பொருக்கின்னு சசிகலாவ சொன்ன ஏண்டா சித்ராவை சொல்லலைன்னு நாமளும் கேட்கல…

சசிகலா கட்சிக்காரர்களுக்கும் அந்த கேள்வி கேட்க தெரியல…
கனிமொழி கட்சிக்காரர்களும் அவர்கள் ஊடகங்களும் சித்ரா ராமகிருஷ்ணன் கைது போட்டோவை போடல…
எல்லாவற்றிலும் பார்ப்பன திராவிட மோதல் அரசியல் தெரிந்த தமிழ்நாட்டு இயக்கங்களும் இந்த விசயத்தை மக்களிடம் எடுத்து போன மாதிரி தெரியல…

பீகாரில் இருக்க லல்லு பிரசாத் யாதவை ஊழல்வாதி என்று தமிழ்நாட்டில் நம்ப வைக்கிறான்,

கருணாநிதி திருட்டு ரயில், விஞ்ஞான ஊழல் என்று பட்டி தொட்டி எல்லாம் நம்ப வைத்து விடுகிறான்.

கனிமொழியை அவமானப்படுத்தும் வகையில் அவர் கைது செய்யப்பட்ட புகைப்படங்களை பரப்பி விட முடிகிறது, ,

ஆனால் மூணே முக்கால் லட்சம் கோடி என மதிப்பிடப் பெற்றிருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஊழலின் சூத்திரதாரியான சித்ரா ராமகிருஷ்ணனை பற்றி ஒரு வரி பேசாமல் அவர் கைது செய்யப்பட்ட புகைப்படங்கள் கூட வராமல் இவர்களால் பார்த்துக் கொள்ள முடிகிறது என்றால் இந்தியாவில் ஆதிக்கசாதி என்றால் யார் ? அப்படி நம்பிக்கொண்டிருக்கும் கோமாளிகள் எல்லாம் யார் ?.

இன்னமும் நாட்டில் குறிப்பாக பிஜேபி ஆட்சியில் ஜாதி மத பேதம் எதுவும் இல்லை என அவர்கள் சொல்வார்கள்.
நாமும் மண்டையை ஆட்டி ஆட்டி அதை ஏற்று கொள்வோம்.

நாம் எத்தனைதான் அவர்களோடு திறந்த மனதோடு பழகினாலும் அவர்கள் எப்போதுமே தங்களுக்கு என ஒரு வரையறை வகுத்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை நம் ஆட்கள் எப்போது புரிந்து கொள்வார்களோ..??

படித்ததில்_பகிர்ந்தது Bharath Nachiappan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.