குஜராத் படுகொலைகள் பற்றிய.. ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..! .

“கொடுரத்தின் உச்சம்!!!” – 2002 குஜராத் படுகொலை குறித்து ஹர்ஷ்மந்தர் எழுதிய வரிகள் இவை.

இன்று அவரை தேசத்துரோகியாக சித்தரித்து உச்சநீதிமன்றத்தின் மூலம் சிறையில் தள்ளக் காத்திருக்கிறது மோடி அரசு .மோடியும் மாறவில்லை. ஹர்ஷ்மந்தரும் தான்.

குஜராத் சூரத் நகரில் ஒரு 11 வயதுப் பெண் குழந்தையின் உடல் 86 இடங்களில் சிதைக்கபட்டு, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு வீசிய யெறியப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் யாரென்று இதுவரை தெரியவில்லை. அரசியல் சாயம் பூசுவது சரியல்ல. ஆனால் மரத்துப்போன மனிதநேயமற்ற மனங்கள் நிறைந்த ஒரு மாதிலம் குஜராத் என்பதில் சந்தேகம் இல்லை. மனம் வெறுத்து விருப்ப ஓய்வு பெற்ற ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பதிவிலிருந்து நாம் நினைவுபடுத்திக் கொள்ள..

ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.
.
மோடியால் முன்னின்று நடத்தப்பட்ட குஜராத் படுகொலைகள் பற்றிய ஹர்ஷ் மந்தேர்யுடைய குருதி படிந்த கட்டுரை இது

ஹிஜாப் தடை என்றும், காஷ்மீரி பைல்கள் என்றும் மதவெறுப்பு விஷத்தை கக்கும் விஷயங்கள் நடக்கும் சூழலில் வரலாற்றை நாம் மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
. .
மீண்டும் இது போன்றதொரு கலவரத்திற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும் மோடி அரசின் இந்துத்வா முகத்திரையை தெளிவுபடுத்த , மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
.
ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர்.
.
குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன்போலீசும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் 2015ல் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம் பின்வருவது…
.
பயங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய குஜராத்திலிருந்து வருகிறேன்.
.
வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட்டது. குற்றவுணர்வையும் அவமானத்தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.
.
அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…. அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்… இப்படியொரு துக்கத்தை நான் இதுவரை கண்டதில்லை.
.
வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர்களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும் உடைமை.
.
அச்சம் படர்ந்த தணிந்த குரலில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப்பால், காயம் பட்டவர்களுக்கு மருந்து… என்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக்கிறார்கள் மற்றவர்கள்.
.
ஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள்.
.
புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சியடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றன. அந்தக் கோரங்களை எழுதவே என் பேனா தடுமாறுகிறது…..
.
இருப்பினும், கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன்.
.
ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும்.

எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.
.
ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள்.
.
அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.
.
இதற்கென்ன சொல்கிறீர்கள்?

Lessons Not Learned from Gujarat 2002 | SabrangIndia
.
19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?
.
தன்னுடைய அம்மாவும், அக்காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.
.
மிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்துஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது.
.
3 மாதக் கைக்குழந்தையுடனிருந்த மகளால் ஓட முடியவில்லை.
.
”எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம்” என்று அங்கிருந்த போலீசுக்காரனிடம் அவள் வழி கேட்டாள்.
.
அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கே தயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியது.
.
பெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை.
.
குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் கற்பழித்திருக்கிறார்கள்.
.
கற்பழிப்பு முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள்;
.
சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள்.
.
அமன் சௌக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது.
.
திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணியவைத்திருக்கிறது.

அகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். ”குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை”. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.
.
வெறியூட்டும்படியான கோஷங்களை ஒலிபரப்பியபடியேமுதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற்றியில் காவித்துணியும் கட்டிய ஆட்களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும்.
.
வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில்களையும்அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
.
ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன….
.
கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள்…
.
இந்து – முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன….

Nanavati Commission to submit final report on 2002 Gujarat riots today | India News – India TV

.
இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.
.
வசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன.
.
பிறகு லாரிகளில் கொண்டு வந்த காஸ் சிலிண்டர்களை கட்டிடத்திற்குள் வைத்துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டிடம் தீப்பிடித்து எரியும்….
.
மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன.
.
அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டு… அதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது.
.
இதற்கு முன் அந்த இடத்தில் ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதிய சாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
.
போலீசு மற்றும் அரசு எந்திரத்தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத்தையும் எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள்.
.
பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்கவில்லை.
.
கொலை, கொள்ளை, கற்பழிப்புக்குத்தான் அவர்கள் பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள்.
.
யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக்குப்பலியானார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் போலீசும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது.
.
பல செய்திகள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினரும் முசுலீம்கள்தான்.

Justice Nanavati-Mehta Commission gives clean chit to Narendra Modi in 2002 Gujarat riots - The Hindu

.
இருபது ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்.
.
அரசியல்வாதிகளின் உத்தரவுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை.
.
சுயேச்சையாகவும், நடுநிலையாகவும்,அச்சமின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர்களைக் கோருகிறது….
.
அகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரியாவது நேர்மையாக நடத்து கொண்டிருந்தால்…இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்கமுடியும். உள்ளூர்ப் போலீசு மற்றும் அதிகாரிகளின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.
.
கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது.
.
அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்….
.
இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.
.
அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும்!
.
கொலைக் கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்?
.
இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஏற்கனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம்.
.
இதோ… இன்னொரு பெருத்த அவமானம்!
.
பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம் இசுலாமிய அமைப்புகளால் தான் நடத்தப்படுகின்றன.
.
“முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம், அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம்கள்தான்கவலைப்படவேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனரமைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லை”என்று சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை…
.
குஜராத்தின் கொலைகாரக் கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென்றுவிட்டது.

அவற்றில் ஒன்று இந்தப் பாடல். நான் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:
.
சாரே ஜஹா ஸே அச்சா இந்துஸ்தான் ஹமாரா
.
இந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.
.
குஜாரத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகள் முடிந்துவிட்டன.
.
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
.
முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும்.
.
மறந்து கொண்டிருப்பது மக்களின் இயல்பு. நினைவு படுத்திக் கொண்டிருப்பது நமது கடமை.

நன்றி – S. பத்மநாபன் முகநூல் பதிவு

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டதன் எதிரொலியே குஜராத் கலவரம் என்று நியாயப்படுத்துவோரிடம் ஒரு கேள்வி. கோத்ரா சம்பவம் வேண்டுமென்றே ரயிலினஅ உள்ளிருந்து பெட்ரோல் ஊற்றி நிகழ்த்தப்பட்டது என்ற ஆதாரங்கள் உள்ளனவே அதற்கென்ன சொல்கிறீரகள்?
கோத்ரா சம்பவம் ஒரு வன்முறை சம்பவமாகவே இருந்திருந்தாலும், அதை குஜராத்தெங்கும் பற்றி எரியும் கலவரமாக மாறுவதற்கு மோடி அரசு ஏன் அனுமதித்தது ? நரோதா பாட்டியாவில் நடந்த 89 பேர் கொல்லப்பட்ட படுகொலை வழக்கில் பாஜக அமைச்சர் மாயா கோட்னானியும், பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் பாபு பஜ்ரங்கியும், ஒரு பெண் மருத்துவரும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்கள். கீழ்க்கோர்ட்டில் 30 வருடங்கள் தண்டனை பெற்ற அவர்கள் சி வருடங்களுக்குப் பின் மோடியின் ஹைகோர்ட்டில் அமைச்சர் விடுதலையாகிறார்.

வெளிப்புறமிருந்து எரியப்படாமல், உள்ளேயிருந்து பெட்ரோல் ஊற்றப்பட்டதால் உட்புறம் அதிகம் எரிந்த நிலையில் காணப்படும் கோத்ரா ரயில் பெட்டி.
வெளிப்புறமிருந்து எரியப்படாமல், உள்ளேயிருந்து பெட்ரோல் ஊற்றப்பட்டதால் உட்புறம் அதிகம் எரிந்த நிலையில் காணப்படும் கோத்ரா சம்பவ ரயில் பெட்டி.

குஜராத் படுகொலைகள் அரங்கேறியபின் மோடி பெரும் சீட்டுக்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்.

பிரதமராகிறார். காஷ்மீரில் 370 ஐ நீக்கி ஒருவருடம் காஷ்மீர் செய்திகள் வெளி உலகில் வராமல் அனைத்தையும் முடக்கி வைக்கிறார்.

இரண்டாம் முறை பிரதமராகிறார். இப்போது எல்லா மாநிலங்களிலும் மத வெறுப்புப் பிரச்சனைகள் புதிதாக கிளப்பி விடப்படுகின்றன. இனி படுகொலைகள் நிகழும்.

மோடி மூன்றாம் முறையாக ஆள்வாரா ? 
இவ்வளவு எளிதாக, மக்களே, உங்களை திசை திருப்பி உணர்ச்சி வயப்பட்ட முட்டாள்களாக்கி பால் முதல் பெட்ரோல் வரை அனைத்து விலை உயர்வு, வேலையின்மை, நிலையற்ற வாழ்வு என்று எதையுமே நினைக்காமல் ‘இந்து’ என்ற ஒற்றைச் சொல்லால் உங்களை மயக்கி விடமுடியுமா ?

அடுத்தவர்களை கொல்வதற்கு கத்திகளை தீட்ட வைக்க முடியுமா ? விழித்துக் கொள்ள மாட்டீர்களா ?

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.