தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, ‘குஷி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ‘குஷி’ திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘குஷி’ திரைப்படத்தை இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் பார்வையாளர்களை கவரும் வகையில் தோன்றுகின்றனர். இவர்கள் திரையில் நல்ல ஜோடியாக வலம் வருவார்கள் என்றும், இவர்களிடையே ஏற்படும் கெமிஸ்ட்ரி பார்வையாளர்களிடத்தில் நல்ல அதிர்வை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

‘குஷி’ உற்சாகமான.. வண்ணமயமான.. காதல் கதையாக இருக்கும் என்பதையும், இந்த முன்னணி ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இடையேயான தோற்றம் உறுதிபடுத்தி, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

‘குஷி’ தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று வெளியாகிறது.

நடிகர்கள்

விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா.

ஒப்பனை : பாஷா

ஆடை வடிவமைப்பாளர்கள் :
ராஜேஷ், ஹார்மான் கௌர் மற்றும் பல்லவி சிங்

கலை : உத்தர் குமார், சந்திரிகா

சண்டைப்பயிற்சி : பீட்டர் ஹெய்ன்

வசன உதவி : நரேஷ் பாபு

மக்கள் தொடர்பு : யுவராஜ்

தயாரிப்பு நிர்வாகி : தினேஷ் நரசிம்மன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ஜெயஸ்ரீ லட்சுமிநாராயணன்

படத்தொகுப்பு : பிரவீன் புடி

இசை : ஹிஷம் அப்துல் வஹாப்

தலைமை நிர்வாக அதிகாரி : செர்ரி

ஒளிப்பதிவு : ஜி முரளி

தயாரிப்பாளர்கள் : நவீன் எர்னானி , ரவிசங்கர் யெலமஞ்சிலி

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : ஷிவா நிர்வாணா

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.