புதுஇயக்குநர் விக்னேஷ்.ஜி.எஸ் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ஓ2.

இந்தப்படத்தை ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்சிஜன் உருளையை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க, தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள்? என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் ஓ2.

இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீனா, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முன்னோட்டம் நேற்று (ஜூன்6,2022) மாலை வெளியானது.

இப்படம் ஜூன் 17 ஆம் தேதி ஹாட்ஸ்டார் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பாகவிருக்கிறது.

இதையொட்டி, படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியதாவது…

இந்தப்படத்தின் கதை என்னிடம் வந்ததுமே இதற்கு நயன்தாராதான் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து அவரை அணுகினோம். இப்போது படம் முழுமையாகத் தயாராகி வெளியீடுவரை வந்துவிட்டது.இப்படம் இரசிகர்களுக்குப் புது அனுபவமாக இருக்கும்.

இப்படத்தை நேரடியாக இணையத்தில் வெளீயிடும் முடிவை எடுக்கக் காரணம் கொரோனா காலகட்டம்தான். திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் பெரும் வரவேற்பை இப்படம் பெறும் என்பதில் மாற்றமில்லை. இருப்பினும் ஏற்கெனவே எடுத்த முடிவின்படி நேரடியாக இணையத்தில் வெளியிடுகிறோம். அதில் உள்ள வசதிப்படி இப்படம் உலகம் முழுவதும் ஏராளமானோருக்குச் சென்று சேரும் என்பது திருப்திதரும் விசயம் என்றார்.

அதொடு இன்னும் சில நாட்களில் திருமணம் செய்யவிருக்கும் நயன்தாரா – விக்னேஷ்சிவன் இணையருக்கு மேடையிலேயே வாழ்த்துத் தெரிவித்தார்.

இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று படத்தைப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது ஓ2 முன்னோட்டம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds