ரிஷி சுனாக்கின் தாத்தா இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் குஜ்ரன்வாலா பகுதியை பூர்விகமாக கொண்டவர். 1930க்களில் குஜ்ரன்வாலா நகரில் பெரிய கலவரம் மூண்டது. குஜ்ரன்வாலாவில் வசதியாக வாழ்ந்த பலர் அந்த ஊரை விட்டு குடிபெயர்ந்தார்கள். அப்படி சென்றவர்களில் ஒருவர் தான் ரிஷியின் தாத்தா. ப்ரிட்டிஷ் ஆட்சியில் இருந்த கென்யாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கே பிறந்தவர் தான் ரிஷியின் அப்பா.

பின்னாளில் கென்யாவுக்கு 1963ல் ப்ரிட்டன் சுதந்திரம் கொடுத்தது. கிழக்கு ஆப்பிரிக்காவில் கென்யா, உகாண்டா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியர்களை ஏராளமாக குடியமர்த்தி இருந்தது ப்ரிட்டன். பர்மாவிலும் இதேபோல் தான் நடந்தது. ப்ரிட்டிஷ் ஆட்சி நடந்த இடமெல்லாம் இந்திய மத்தியதர வர்க்கம் குடிபெயர்ந்து, வணிகர்களாகவும், குமாஸ்தாக்களாகவும் ப்ரிட்டிஷ் ஆட்சி நடைபெற வழிவகுத்தது.

ஆனால் பர்மாவில் இருந்து இந்திய்ர்கள் அடித்து விரட்டபட்ட அதுவே காரணமாக அமைந்தது. ப்ரிட்டிஷ் ஆட்சியின் அள்ளக்கைகளாக உள்ளூர் மக்கள் அவர்களை கருதினார்கள். அதே மாதிரி பிரச்சனை ஆப்பிரிக்காவிலும் முளைத்தது. கிழக்கு ஆப்பிரிக்காவில் 250,000 இந்திய வம்சாவளியினர் ப்ரிட்டிஷ் பாஸ்போர்ட்டுடன் இருந்தார்கள். “ப்ரிட்டிஷ் ஆசியர்கள்” என அழைக்கப்பட்டர்கள். அவர்கள் பிறந்த ஊர்கள் பாகிஸ்தான், இந்தியா என இரு நாடுகளாக பிரிந்து இருந்தன. அவர்களில் பலர் இந்தியாவை பார்த்ததே கிடையாது.

சுதந்திரத்துக்கு பின் அவர்களை கென்யா வெளியேற சொல்ல, அவர்கள் ப்ரிட்டனிடம் அடைக்கலம் கேட்க, ப்ரிட்டிஷ் அரசும் அவர்களை ப்ரிட்டனுக்கு அழைத்துக்கொண்டது. அப்படி சென்றவர் தான் ரிஷியின் அப்பா. ப்ரிட்டனில் டாக்டராக பணியாற்றினார். டான்சானியாவில் இருந்து அகதியாக வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணை மணந்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவ்ர் தான் ரிஷி சுனாக். பிறந்த ஆண்டு 1980

நல்ல வசதியான குடும்பம். ரிஷியும் நல்லா படிக்கும் மாணவன். ஸ்டான்போர்டுக்கு படிக்க செல்கையில் உடன் படிக்கும் அக்ஷதா மூர்த்தி எனும் பெண்ணுடன் காதலில் விழுந்தார். அவர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள்.

அக்ஷதா மூர்த்தியிடம் தனிப்பட்ட முறையில் இருந்த இன்போசிஸ் பங்குகள் மூலமே அவர் ப்ரிட்டிஷ் அரசியை விட அதிக பணக்காரியாக இருந்தார். அவரை மணந்தபின் ரிஷியின் வாழ்க்கை எங்கேயோ சென்றுவிட்டது. சுக்ரதிசை அடித்தது. நிதி நிறுவனங்களில் வேலை செய்துகொண்டு இருந்தவர் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் அரசியலில் குதித்தார். எம்பி ஆனார். மந்திரி ஆனார். இப்போது பிரதமரும் ஆகிவிட்டார்.

இந்தியாவின் மருமகன், ஆனால் இந்தியர் அல்ல

ஆபிரிக்காவின் மகன், ஆனால் ஆபிரிக்கர் அல்ல

ப்ரிட்டிஷ் குடிமகன், ஆனால் அங்கே அவரை இந்தியர் என்கிறார்கள்.

பூர்விகம் பாகிஸ்தான், ஆனால் அங்கே அவரை பாகிஸ்தானியாக கருதுவதில்லை

இனத்தால் பஞ்சாபி, ஆனால் சீக்கியர் அல்ல. அதனால் பெரியதாக அங்கேயும் உற்சாகவெள்ளம் கரைபுரன்டு ஓடவில்லை

ஆக உண்மையான க்ளோபல் சிட்டிசன் என ரிஷியை சொல்லலாம் 🙂

ப்ரிட்டன் மற்றும் கன்சர்வேடிவ் கட்சி இரண்டும் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். சாதிப்பாரா ரிஷி? மார்கரெட் தாட்சர் மற்றும் வின்ஸ்டன் சர்ச்சிலின் கட்சியையும், நாட்டையும் கரையேற்றுவாரா? பார்ப்போம்

#history_is_his_story

~ நியாண்டர் செல்வன்

————————————-

இங்கிலாந்து பிரதமர் ஆகப்போற ரிஷி சுனாக்கோட மனைவி இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மகள். இவருக்கு இன்ஃபோசிஸ் கம்பெனியில் வாரிசு பங்குகள் இருக்கு.

அதுல இருந்து ஆண்டுக்கு 11 மில்லியன் பவுண்டுகள் டிவிடெண்டு வருதாம்.

இங்கிலாந்துல வாழும் வெளிநாட்டு குடியுரிமை கொண்டவர்கள் வெளிநாட்டையே தன் நிரந்தர வாழ்விடம்னு என்று அரசுக்குத் தெரிவிச்சிட்டா வெளிநாட்டுல இருந்து வரும் வருமானத்துக்கு வரி கட்ட வேண்டியதில்ல.

இந்தச் சலுகைக்காகவே ரிஷி சுனாக்கின் மனைவி இங்கிலாந்து குடியுரிமை கேக்காம இந்தியாவே தனது நிரந்தர வாழ்விடம்னு சொல்லி அங்க வரிச்சலுகை பெற்று வருகிறார்.

இதைப் பற்றி கேள்வி கேட்டப்போ தன்னோட மனைவி அவங்க பெற்றோரை பார்த்துக்க இந்தியாவுக்கே போய்டுவாங்க இங்கயே இருக்க மாட்டாங்கன்னு சொல்லி இருக்கார் இந்த ரிஷி சுனாக்.
எப்படி காரணம்னு பாருங்க.. புருசன விட்டுட்டு ஊருக்கு வந்துடுவாங்களாம்..

என்னதான் சட்டப்படி சரினு சொன்னாலும் நாட்டுக்கு வரி கட்டக்கூடாதுனு திட்டம் போட்டு செஞ்சிருக்காங்க பாத்தீங்களா.. வரி கட்ட மனசில்லை, ஆனால் நாட்டை ஆளனும். மத்தவங்களுக்கு வரி போடனும்.

சமீபத்துல இவரு நிதி அமைச்சராக இருந்தப்ப முதுகுல குத்திட்டார்னு அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனே புலம்பி இருந்தாரு. சுனாக் நிதி அமைச்சரா இருந்தப்ப பண்ணாதத தான் இப்போ பிரதமராகி பண்ணிடுவார்னு நம்பிட்டு இருக்கானுக நம்ம பிரிட்டீஷ் பங்காளிக.

ஆனா இந்த மாதிரி நாட்டுக்கு வரி கட்ட மனசில்லாம ஆனா நாட்டை ஆளனும்னு நினைக்கிற சிறப்பான குணம் உலகத்துலயே ஒரு குறிப்பிட்ட ஆளுகளுக்குத்தான் இருக்கு. அது நம்மளுக்கு நல்லாவே தெரியும்.. 😎

–வாட்சப் பகிர்வு.


சுனாக்கின் பொருளாதாரக் கொள்கைகளும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி வித்தியாசமாக இல்லை.பெரிய நிறுவனங்களுக்கு வரிவிலக்கு தருவதை ஆதரிப்பவராக உள்ளார். சிறு தொழில்கள் மீது அக்கறை கொண்டவராகத் தெரியவில்லை! அதனால் தான் லிஸ்டிரஸ் 40 பில்லியன் டாலர்களை ( 3.25 லட்சம் கோடிகள்) பெரு நிறுவனங்களுக்கு வரிவிலக்கு தந்தது, ”நல்லெண்ண நடவடிக்கை தான்” எனச் சொன்னார்.

இந்து மத வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவராக இருந்தும், ‘மாட்டிறைச்சி சாப்பிடுவது குற்றமல்ல’ என்ற லிபரல் சிந்தனை கொண்டவராக உள்ளார். இவையாவுமே ரிஷி சுனக் ஒரு அப்பட்டமான ஆதிக்க ஆங்கிலேய சிந்தனை கொண்டவர் மட்டுமல்ல, இந்திய வலதுசாரி சித்தாந்தத்திற்கு நெருக்கமானவராகவும் உள்ளார் என்பதை நாம் அறியலாம்! இது தான் உண்மையான முகம்!

இங்கே பாஜக ஆதரவாளர்கள் ரிஷி சுனக்கை ஏன் கொண்டாடுகின்றனர் என்பதை நாம் இந்தப் பின்னணியில் இருந்து புரிந்து கொள்ளலாம்!

ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு வந்தது பெரிய விஷயமில்லை. இன்று இங்கிலாந்து இருக்கின்ற கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை இவர் எப்படி மீட்டெடுக்கப் போகிறார் என்பதில் தான் இருக்கிறது அவரது வெற்றியே!

இங்கிலாந்தில் மக்களை விலை கொடுத்து வாங்க முடியாது! அங்குள்ள ஊடகங்களை ஊழல்மயப்படுத்த முடியாது, பாராளுமன்ற உறுப்பினர்களை பேரம் பேச முடியாது! பொய் பேசினாலே புறம் தள்ளிவிடுவார்கள் – அது எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும்! தவறு செய்தால் யாராயிருந்தாலும் தூக்கி எறியத் தயங்கமாட்டார்கள்! இந்தியாவில் 11 லட்சம் கோடிகள் கார்ப்பரேட் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டு மோடி போல ஹாயாக எந்த பிரதமரும் பிரிட்டனில் நடமாடவே முடியாது! ரிஷு சுனக் முள் கிரீடத்தையே தற்போது அணிந்துள்ளார்! 

ரிஷி சுனக்கின் உண்மையான பின்னணி என்ன?


ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு தற்போது 6850 கோடி ரூபாய் (730 மில்லியன் பவுண்டுகள்) என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினார்களிலேயே அதிக செல்வம் உடையவராக உள்ளார். பிரித்தானிய பேரரசின் (UK) அரசரான சார்லசின் ஆபரணங்கள் தவிர்த்த சொத்து மதிப்பை விட இரண்டு மடங்கு சொத்து மதிப்பு இவருடையது.

ரிஷி சுனக் தனது முழுமையான சொத்துக்களை அறிக்கையிடாமல், தன் பெயரிலும் தன் மனைவி பெயரிலும் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்களை மறைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் தற்போது எழுகின்றன. இத்தகைய வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளோடு நாம் அதிகம் கவனிக்க வேண்டியது அரசியலில் இவர் கொண்டுள்ள வலதுசாரி கண்ணோட்டமே.

கடந்த ஜூலை மாதம் நெருக்கடியின் போது ரிஷி சுனக் தனது நிதியமைச்சர் பதவியை முதலில் ராஜினாமா செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து பல அமைச்சர்கள் வெளியேறினர். இறுதியில் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு, தன்னை வளர்த்துவிட்டவரையே முதுகில் குத்தியவர் தான் ரிஷி சுனக்.

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழையபடி கொண்டு செல்ல கடுமையான முடிவுகள் எடுப்பேன் என்கிறார் ரிஷி சுனக். ஆனால் எதிர்க்கட்சியை சேர்ந்த ஜெரமி கோர்பைன் உட்பட பலர், இது 1% செல்வந்தர்களை காப்பாற்ற 99% மக்கள் பொருளாரத்தை சுமக்கும் நிலைக்கு தள்ளிவிடும் என்கின்றனர்.

சீக்கியர்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர் பிரீத்தி படேல். இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் பதவியில் இருந்த பிரீத்தி படேல் ஆர்.எஸ்.எஸ்.-ன் வெளிப்படையான ஆதரவாளர் என்று தெரிந்தும் அவரை ஆதரித்தவர் ரிஷி சுனக்.

பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக் பின்புலம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.