பிக்பாஸ் பின்பற்றும் உளவியல் விஷயங்கள்.

அடுத்தவர் பெட்ரூமுக்குள் எட்டிப் பார்க்கும் மனப்பான்மையை வளர்ப்பது.

இயல்பான கதைகள் அல்லாமல் Extreme ஆன வாழ்க்கைக் கதைகளை பிக்பாஸ் கதாபாத்திரங்கள் பேசுவது.

அடுத்தவர் வாழ்க்கையைப் பற்றி புரணி பேசும் மனப்பான்மை.

சொன்ன வேலையைச் செய், யோசிக்காதே என்கிற மனோபாவத்தை உருவாக்குவது.

Gladiator படம் போல இரண்டு பேரை சண்டை போட வைத்துக் கொண்டு, இரு புறமும் ஆதரவாளர்கள் வெளியிலிருந்து கூக்குரலிடுவது.

பிக்பாஸ் பற்றிய மார்க்கெட்டிங், விவாதங்கள், மீம்ஸ்கள், கிண்டல்கள், சீரியஸ் பேச்சுக்கள், கிசுகிசுக்கள் என்று அனைத்து விதங்களிலும் பிக்பாஸ் பற்றியே audience ஐ பேசவைப்பது. பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி விவாதிக்கும் நூற்றுக்கணக்கான சேனல்கள் ஒரு உதாரணம்.

ஹீரோ, வில்லன், அடியாள், காதல், சொல்வதை அப்படியே கேட்கும் அப்பாவி, எடுத்தெறிந்து பேசுபவர். இப்படி கேரக்டர்களை உள்ளே எடுத்து அதை சுவாரசியமாக காட்டுவது.

விஜய் டிவியின் பிரபலங்கள் பிரபலமாவது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் tragdy களை மையப்படுத்துவதால்.

பிக்பாஸ் என்பவர் கமல் கூட அல்ல. அவருக்கும் மேலே யாரோ ஒரு கடவுள் என்பது போல சொல்வது. அதன் மூலம் பிக்பாஸ் என்பதை கடவுள் போல புரியாத ஒருவராக உருவாக்குவது.

இதைப் பார்க்கும் பார்வையாளர்கள் இதை நிஜமென்று நம்பாவிட்டாலும் அது சுவராசியமாக இருப்பதாக உணர்கிறார்கள்.

ஒருவரின் குணாதிசயம் ஒரு போதும் மாறுவதில்லை. ஆனால் பிக்பாஸில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்குப் பின் ஒரு நபர் முற்றிலும் மாறுபட்ட குணாதிசயம் கொண்டவராக மாறிவிட்டதாக காட்டுவது.

திருநங்கைகளை கொண்டு வருவது போன்ற சில நல்ல விஷயங்கள் பிக்பாஸ் செய்யும் பாவச் செயல்களை கழுவுவதற்காக வேண்டுமென்றே கொண்டு வரப்பட்டுள்ள நல்ல விஷயங்கள். ஓவியா போன்ற போலியான ரோல்மாடல்களை உருவாக்குவது.

அலசுகிறார் மனநல ஆலோசகர் வில்லவன் ராமதாஸ்.

YouTube player

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.