சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ‘காந்தாரா’ படத்தைப் போல், தற்போது மலையாளத்தில் வெளியாகி மெகா ஹிட்டான ‘மாளிகப்புரம்’ பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தமிழில் வருகிற 26ம் தேதி குடியரசு தினத்தில் வெளியாகிறது. மக்களிடத்தில் இதன் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

மூடப்பழக்கங்களையும், மடத்தனங்களையும் வளர்க்கும் தமிழ் சினிமாவில் காந்தாரா, ஆர்ஆர்ஆர் போன்ற சங்கிப் படங்களின் வரிசையில் அடுத்து வந்திருப்பது இந்த மாளிகபுரம்.

‘மாளிகப்புரம்’ படத்தில் ஐயப்பனின் மார்கழி மாத வழிபாடு பிரதானம். 
‘மாளிகப்புரம்’ படம், ஒரு குடும்பத்தின் பிரச்னையை ஆன்மீக வழியாக பார்க்கிறது. மளிகபுரம் என்பது முதன்முதலாக சபரிமலைக்குச் செல்லும் பெண் குழந்தைகளைக் குறிக்கும். அப்படி ஒரு சிறுமி கடவுள் மேல் பக்தி கொண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதைச் சுற்றித்தான் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது.

எட்டாம் நூற்றாண்டில் மதுரையிலிருந்து சென்று பந்தள நாட்டில் குடியேறிய பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களே ஐயப்பன் பிறந்த பந்தள ராஜவம்சத்தினர்.
ஒரு பக்தன் ஐயப்பனை வேண்டி தூய்மையாக விரதம் இருந்தால் சாமி ஐயப்பன் ஏதோ ஒரு உருவத்தில் நிச்சயம் அவர்கள் முன்பு தோன்றி வழித்துணையாக இருப்பார் என்பது மற்றுமொரு மத நம்பிக்கை கதை !!! 

இப்படத்தை புதுமுக இயக்குனர் விஷ்ணு சசிசங்கர் இயக்கிள்ளார். இவர், AVM தயாரித்து, சூர்யா-ஜோதிகா நடித்த #பேரழகன் படத்தை டைரக்ட் செய்த சசிசங்கர் மகன் ஆவார்.

நாயகனாக உன்னி முகுந்தன் நடித்துள்ளார். இவர், தனுஷ் நடித்த #சீடன் படத்தில் அறிமுகமானவர். சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த #யசோதா படத்தில் நடித்திக்கிறார்.

முக்கிய கதாபாத்திரமாக குழந்தை நட்சத்திரம் பேபி தேவானந்தா நடித்து அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர்களுடன் சம்பத்ராம், மனோஜ் கே.ஜெயன்,மாஸ்டர் ஸ்ரீபத்,டி.ஜி.ரவி,சைஜிகுருப்,அஜய் வாசுதேவ்,ஸ்ரீஜித்ரவி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இதில் இரண்டு பாடல்களை பிரபல இயக்குனர்
R.V.உதயகுமார் எழுதியுள்ளார். மாபெரும் வெற்றிப்படங்கள் தந்த ஆர்.வி.உதயகுமார் பக்திப் பாடல்கள் எழுதும் நிலைக்குப் போய்விட்டாரா என்ன.
ஒரு பாடலை இயக்குனர் யார் கண்ணன் எழுதியுள்ளார்.

காவ்யா பிலிம் கம்பெனி வழங்கும், ஆன் மெகா மீடியா இணைந்து தயாரிப்பில்
#மாளிகப்புரம்.

இயக்கம் : விஷ்ணு சசிசங்கர்.
தயாரிப்பு : பிரியா வேணு – நீட்டா பிண்டோ.
கதை,திரைக்கதை: அபிலாஷ் பிள்ளை.
ஒளிப்பதிவு : விஷ்ணு நாராயணன்.
இசை: ரானின்ராஜ்.
எடிட்டிங் : சமீர் முகமது.
வசனம் : கலைமாமணி வி.பிரபாகர்
சவுண்ட் டிசைனர் : எம்.ஆர். ராஜாகிருஷ்ணன்
ஸ்டண்ட்: ஸ்டண்ட் சில்வா,
நடனம்: ஷெரிப்
பாடல்கள்: இயக்குனர் R.V. உதயகுமார்,
இயக்குனர் கண்ணன்,முருகானந்தம், பல்லவிகுமார்,கோவை சிவா.

பாடியவர்கள் : பிரசன்னா/ வேல்முருகன் / பிரபாகர்/அஜீம்ராஜா / காயத்ரி/ ஏ.கே,ரமேஷ்/சி.அதிதீ

Tamil Nadu Release By #TridentArts Ravi.

பி.ஆர்.ஓ : ஜான்சன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.