6.01.2023

தமிழ் திரையுலகத்தில் மூத்த சண்டை பயிற்சி கலைஞராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் செயல்பட்டு வந்த அருமைத் தோழர் ஜூடோ ரத்தினம் இன்று உயிரிழந்தார் 

தோழர் ஜூடோ ரத்தினம் 1966ம் ஆண்டு நடிகர் ஜெய்சங்கர் நடித்த ‘வல்லவன் ஒருவன்‘ திரைப்படத்தின் மூலம் சண்டை பயிற்சி மாஸ்டராக அறிமுகமானவர். தமிழ் திரையுலகத்தில் புகழ்பெற்ற முன்னணி நடிகர்களாக திகழும் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரின் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்டு 12000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டை பயிற்சி மாஸ்டராக பணிபுரிந்து கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றவர். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர். தனது சிறுவயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக பெருமிதத்தோடு அறிமுகம் செய்து கொள்ளும் பண்பாளர். அவரது மறைவு தமிழ் திரையுலகத்திற்கும், சண்டை பயிற்சி கலைஞர்களுக்கும், பொதுவுடமை இயக்கத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரது மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds