மதிவாணன் இயக்கத்தில் அர்ஜை, சிவ ஷா ரா, ஆஷிக், ராஜ்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம் ஷூட் த குருவி.
கதையில், இரண்டு கேரக்டர்கள். அதில் ஒருவர் கேங்க்ஸ்டர் அர் ஜை, இரண்டாவதாக வருபவர் ஆஷிக். இவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது இப்படத்தின் கதை.
தனது ஆப்ரேஷனுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதால், வாழ்க்கையை வெறுத்து போய் இருக்கும் சாதாரண மனிதன் ஆஷிக் சாகும் முன் 5 பேரை கொல்லப் போகிறான். அப்படி டார்கெட் செய்து போகும் போது, எதிர்பாராதவிதமாக கேங்க்ஸ்டர் அர்ஜையையும் தாக்கி விடுகிறான் ஆஷிக்.
குருவி ஷூட்டிங் என்னவானது என்பது மீதிக்கதை.
இயக்குனர் மதிவாணன் ஆறே நாளில் படமாக்கி வந்துள்ளது இக்குறும்படம். படம் முழுக்க டெம்போவை மெயின்டெய்ன் செய்திருக்கிறார் இயக்குனர். பார்வையாளர்களை ஈர்க்கும் அளவுக்கு திருப்பங்களும் திருப்பங்களும், நகைச்சுவையும் உள்ளன.
அர்ஜய், சுரேஷ் சக்ரவர்த்தி, ஆஷிக் ஹுசைன், ஜிப்சி நவின் மற்றும் ஷிவா ஷரா ஆகியோர் நேர்த்தியான மற்றும் உறுதியான நடிப்பை வழங்கியுள்ளனர்.
நடிகர்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததை வழங்கியுள்ளனர். பிரெண்டன் சுஷாந்தின் ஒளிப்பதிவு தொழில்நுட்ப ரீதியாக சிறந்து விளங்குகிறது.
ஜான் பெனியல், ஸ்ரீகாந்த் லக்ஷ்மன் மற்றும் நியுசாய் ஆகியோரின் இசை நன்றாக உள்ளது. கமலக்கண்ணனின் எடிட்டிங் கதையின் அழுத்தத்தைக் கூட்டி இருக்கிறது.