மணிப்பூரில் சத்தமில்லாமல் ஒரு இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

பழங்குடியினத்தவரான முர்மு ஜனாதிபதியாக நாட்டை ஆளும் இதே காலத்தில் தான் மணிப்பூரில் பழங்குடியினரை கிறிஸ்தவர்கள் என்று மதரீதியாக குறித்து அவர்களை கொத்து கொத்தாக கொன்று வருகிறது அரசு ஆதரவு பெற்ற இந்துத்துவா தீவிரவாத கும்பல்கள்.

ஹரம்பாய் டெங்கோல், மைட்டி லெப்பூல்ஸ் எனப்படும் இரு இந்துத்துவா தீவிரவாத அமைப்புக்களை அரசே உருவாக்கி வளர்த்து, மே 2 ஆம் தேதி இனப்படுகொலைகளை நிகழ்த்த ஆரம்பித்தது. மைட்டி என்கிற மேல் சாதி இனத்தவர் என்றாலும் இது இந்து-கிறிஸ்தவ மத மோதல்களாக வெடித்து நிகழ்ந்துள்ளது. மைட்டி இனத்தவர்களே தங்கள் சாதியினருடைய கிறிஸ்தவ தேவாலயங்களை எரித்துள்ளார்கள்.

கலவரம் ஆரம்பித்த இந்த ஒரு மாதத்திற்குள், 40 ஆயிரம் மக்கள் ஊர்களை விட்டு தப்பியோடிப்போய் காடுகளுக்குள் தஞ்சமடைந்து ஒளிந்துகொண்டுள்ளார்கள். 200 சர்ச்சுகளுக்கு மேல் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. அரசின் கணக்கெடுப்பு படியே 80 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ரோட்டில் நடந்து போகுபவர்களைக் கூட பிடித்து அடித்து கொல்லும் எதேச்சதிகார வெறித்தனம் நிலவ ஆரம்பித்துள்ளது.

295 இடங்களில் தன்னார்வல அமைப்புக்கள் முகாம்களை அமைத்துள்ளன. அங்கே இன்டர்நெட், தொலைக்காட்சி, பத்திரிக்கைகள், அரசு அமைப்புக்கள் என்று யாருக்கும் உள்ளே அனுமதியில்லை. வெளியேயும் செய்திகள் வரமுடியாது.

இந்தக் கலவரம் நடக்கவேண்டும் என்று பிஜேபி அரசு இந்து தேசியத்தை மைட்டி சாதியினரிடையே வளர்த்து இன்று அந்த மைட்டி சாதியினர் இந்துவல்லாத பழங்குடியினர் அனைவரையும் கிறிஸ்தவர்கள் என்று அடித்துக் கொல்ல அனுமதித்து அமைதியாய் இருப்பது போலத் தெரிகிறது.

இந்த ஒரு மாதத்தில் அங்கே கலவரத்தால் பாதிக்கப்படும் பழங்குடியினரும், மைட்டி இனத்தவரும் கூட அரசை, போலீசை, ராணுவத்தைக் கூட நம்பத் தயாராயில்லை.

பாஜக அரசின் மதவெறுப்பு அரசியலின் கோரமுகத்தையும் அதனால் ஒரு மாநிலமே எரிந்து கொண்டிருப்பதையும் இன்று நாம் காண்கிறோம்.

இதே மதவெறிக் கலவரங்கள் நாளை இங்கும் நடக்கலாம்.
எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் நடத்தப்படலாம்.😰😰😰

–சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்.

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds