தமிழில் காதல் படத்தில் பிரபலமான தமன்னா நம்பர் ஒன் ஸ்டாராக பல வருடங்கள் இருந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பெரிய ரவுண்ட் வந்தார்.

பாலிவுட்டும் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி ,சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்தார். வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது அவருக்கும் விஜய் வர்மாவுக்கும் காதல் ஏற்பட்டது. அந்தக் காதலை இரண்டு பேருமே சில மாதங்களுக்கு முன்பு உறுதி செய்திருந்தனர். ஆனால் திருமணம் எப்போது நடக்கும் என்பது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

விடுவார்களா ஊடகக்காரர்கள் விஜய் வர்மாவிடம் எப்போ திருமணம் எப்போ திருமணம் என்று அரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சமீபத்தில் ஊடகக்காரர்களிடம் பேசிய விஜயோ, ‘இதற்கு பதிலளிக்க முடியாது’ என நாசூக்காக பதிலளித்துவிட்டார்.

உடனே போச்சுடா இவங்க லவ் பிரேக்கப் ஆகிடுச்சா என்கிற ரீதியில் கொளுத்திப் போட, இது ரசிகர்கள் பாதிப்பேரின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கின்றதாம். அவர்களின்  திருமண போட்டோவை சீக்கிரம் கண்கொள்ளா காட்சியாகப் பார்ப்போம். கவலையே வேண்டாம்.

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.